Title of the document

பொதுமக்கள் பலர் தங்கள்  செல்ல வளர்ப்புப் பிராணிகளான ஆடு, மாடு,நாய், பூனை போன்றவற்றிற்கு உணவு அளித்து அவற்றின் பசியை போக்கி வருகின்றனர்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர் தெருவோர பிராணிகளுக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக உணவு அளித்து வருகின்றனர்.
  உணவு கிடைக்காமல் பிராணிகள் பல நேரம் பட்டினியால் வாடுகின்றன. அந்நேரத்தில் அப்பிராணிகள் குணாதிசியத்தில் மாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறையும் ஏற்படுத்தும்.
 கோடைகாலங்களில் வெப்பம் உச்சத்தில் இருக்கும் போதும் பிராணிகளின் குணாதிசயங்கள்  மாறுபடும். இதனால் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும். தெருவோர பிராணிகளுக்கு உணவு கிடைக்காத போது பொதுமக்கள் வாங்கி செல்லும் உணவு பொருட்களை உண்ணவும் வரும்.
 பொதுவாக மனிதர்கள், மனிதர்களிடம் மட்டுமே பாசமும், அக்கறையும் காட்டுகிறார்கள். நாம் பசிக்கிறது என்றால் வாய்விட்டுக் கேட்கிறோம். ஆனால், வாயில்லா ஜீவன்களால் அப்படி கேட்க முடியாது. பசியை தாங்கவும் அவைகளால் முடியாது. அதனாலே தெருவோர பிராணிகள் உணவிற்காக நகர்புறங்கள்ல் வீட்டிற்கு வீடு வந்து நிற்கும் நிலையையும் காண இயலும்.
வசதியுள்ளவர்கள் உள்நாட்டு
பிராணிகளிடம் பாசம் காட்டுவதை கவுரவக் குறைச்சலாக கருதுகின்றனர். அதனாலே பராமரிப்பின்றி உள்நாட்டு பிராணிகள் தெருவோரம் இருப்பதை காண இயலுகிறது.
பலர் வெளிநாட்டு  செல்லப் பிராணிகளை வளர்ப்பதும், பராமரிப்பதையும் அந்தஸ்தாக கருதுகிறார்கள். அப் பராமரிப்பிற்கு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் செலவிடுவதும் உண்டு.
அதே நேரம் நமது சீதோஷ்ண நிலைக்கு உகந்த உள்நாட்டு பிராணிகளிடமும் பாசத்தைக் காட்டிப்பாருங்கள். வாழ்க்கை மிகவும் அழகாகும்.
தெருவோர பிராணிகளான ஆடு,மாடு, பூனை, நாய்களுக்கு சாப்பாடு கொடுக்க ஒரு தொகை
செலவழித்து வருகின்றனர்அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர். 15 வருடங்களுக்கும் மேலாக
 நாள்தோறும்  தெருவோர பிராணிகளான ஆடு, மாடு, பூனை, தெரு நாய்களுக்கும், காக்கை, குருவிகளுக்கும்  உணவு வழங்கியும், குடிநீர் வைத்தும் பராமரித்தும் வருகிறார்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post