டிக்கெட் இல்லாத பஸ் அறிமுகம்!

Join Our KalviNews Telegram Group - Click Here
கொரோனா தொற்று மண்டலமாக மாறி வரும் சென்னையில், பணப் பரிவர்த்தனையை தவிர்க்கும் வகையில், டிக்கெட்டில்லாத பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், தலைமைச் செயலக ஊழியர்களும் தப்பவில்லை என்பது, சமீப சோதனைகளில் தெரிய வந்துள்ளது.எனவே, தலைமைச் செயலக ஊழியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபடும் மாநகர பஸ்களில், பணப் பரிவர்த்தனையை தவிர்க்க, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதன் முதல்கட்டமாக, இரண்டு பஸ்களில், 'பேடிஎம், கூகுள் பே' வழியாக டிக்கெட் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தி.நகர் மற்றும் தாடண்டர் நகரில் இருந்து புறப்படும் இரண்டு பஸ்களில், இந்த சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, சென்னையில் இயங்கும், 300 பஸ்களிலும் இம்முறை செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்