Title of the document
முன்னிலை : முனைவர் ச.கண்ணப்பன் ந.க.எண் : 0099 / பகஇ / பிசி / 2020
நாள் 12.06.2020

பொருள் : பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்கு Applications of Mathematics in difference domains
( பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் ) - பயிற்சி அளித்தல் - தொடர்பாக

பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்.

IMG_20200612_211311

IMG_20200612_211324

மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கணிதம் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்காக , அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிசெய்யும் முதுகலை கணித ஆசிரியர்களுக்கு ' Applications of Mathematics in different domains ' ( பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் ) என்ற தலைப்பில் ஓர் ஆசிரியர் பயிற்சிப் பயிலரங்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது .

மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் உள்ள கணிதப் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றபோதும் , கணிதம் கற்பதன் நோக்கம் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் மேலும் அறிந்து கொள்ள இப்பயிற்சி வழிவகுக்கும் . +1 , +2 பாடத்திட்டத்தின் கீழ் கற்கப்படும் கணிதம் உயர்கல்விக்கான அடித்தளமாக இருப்பதால் , அதன் பயன்பாடுகள் குறித்த நுணுக்கங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் இன்றியமையாததாகிறது .

இந்தப் பயிலரங்கு கணிதப் பாடத்தில் திறன்மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் கணித ஆசிரியர்களை மேம்படுத்தச் செய்யும் . இச்செயல்சார் பயிலரங்கினை மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் , ஏஐசிடிஈ ( AICTE ) ஆகியவற்றின் பயில்தல் தொழில்நுட்ப எட் - டெக் ( Ed - Tech ) கூட்டாளராக உள்ள ஈபாக்ஸ் நிறுவனத்தினர் நடத்த இருக்கின்றனர் .

இவர்கள் கோவிட் -19 பொதுமுடக்கத்தின்போது ஏஐசிடிஈ மூலமாக தங்கள் ஈபாக்ஸ் பயில்தல் தளத்தினை இலவசமாக எல்லா பொறியியல் மாணவர்களுக்கும் வழங்கி , அவர்களது பயில்தல் தடைபடாமல் இருக்க உதவினர் . கணிதம் பொதுவான அடித்தளத்திற்கான பாடமாக இருப்பதால் , இப்பயிலரங்கு வளரும் துறைகளான தரவுப் பகுப்பாய்வு ( data analysis ) , செயற்கை நுண்ணறிவு ( artificial intelligence ) , பொறிக்கற்றல் ( machine learning and அறிவியல்பூர்வ கணித்தலியல் ( scientific computing ) போன்ற துறைகளில் தங்கள் எதிர்காலத்தை மாணவர்கள் அமைத்துக்கொள்வதற்கு உதவும் வகையில் ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் .

பள்ளிக்கல்வி இயக்குநர் 6 / 2 D தமிழ்நாடு அரசு கல்வித்துறைப் பாடத்திட்டத்தை அடியொற்றி வடிவமைக்கப்பட்டுள்ள இப்பயிலரங்கு 10 நாள்களுக்கும் . தினமும் 8 மணிநேரம் கீழ்க்கண்ட அட்டவணையின்படி நடைபெறும் :

காலை 9 மணி முதல் 11 மணி வரை - ஈபாக்ஸின் துறை வல்லுனர்கள் வழங்கும் நேரலை பயிற்சி , பின்னர் அதனைத் தொடந்து காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை - ஈபாக்ஸ் இணையவழிப் பயிற்சி ( 1 மணிநேரம் உணவு இடைவேளையோடு 5 மணிநேரப் பயிற்சி ) ஆசிரியர்கள் 6 மணிநேர இணையவழிப் பயிற்சியின்போது 10 நிகழ்நேரப் பயிற்சிகள் ( Realtime exercises / applications / simulations ) செய்வார்கள் . பயிற்சியின்போது எழும் ஐயங்களைத் தீர்க்க வல்லுனர்களின் வழிகாட்டலும் வழங்கப்படும் .

10 நாள் பயிலரங்கு முடியும்போது , ஒவ்வொரு ஆசிரியரும் 100 நிகழ்நேரப் பயிற்சிகளுக்கு விடைகண்டு , திறமையான மாணவர்களை உருவாக்கும் திறன் பெற்றிருப்பார்கள் . ஒவ்வொரு ஆசிரியரின் பயில்தல் வளைகோடு குறித்துப் பயிலரங்கின் இறுதியில் விரிவான அறிக்கையை ஈபாக்ஸ் வழங்குவார்கள் .

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை கணித ஆசிரியர்களுக்கும் இந்த பயிலரங்கை இப்பொது முடக்க காலத்தில் பயிற்சி பெற உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

எனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை கணித ஆசிரியர்கள் http://eboxcolleges.com/mathapp இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் 22.06.2020 அன்று தொடங்க உள்ள BootCampi ( துவக்க முகாமில் ) பதிவு செய்து பங்கு பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது .

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதனை தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை கணித ஆசிரியர்கள் இப்பயிற்சித் திட்டத்தில் பங்கு பெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

இப்பயிற்சி தொடர்பாக ஏதேனும் ஐயப்பாடுகள் இருப்பின் Dr. Balamurugan , Chief Learning Officer , Amphisoft Technologies E - Mail id : balamurugan@amphisoft.co.in D Mobile No 9442019192 - க்கு தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது .

 பெறுநர்

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்

நகல் : 1 . அரசு முதன்மைச் செயலாளர் , பள்ளிக் கல்வித்துறை , சென்னை -9 அவர்களுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது .

2.ஆணையர் , பள்ளிக் கல்வித்துறை , சென்னை -9 அவர்களுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post