Title of the document
💐💐💐💐💐💐💐💐💐💐
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பொறுப்பேற்ற காலம் தொட்டு வெளியிட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற அறிவிப்பு ஏழரை கோடி மக்கள் மத்தியிலும் பெருத்த வரவேற்பினைப் பெற்றுள்ள அறிவிப்பாகும்.
💐💐💐💐💐💐💐💐💐💐
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15 முதல் 25 வரையில் திட்டவட்டமாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பள்ளிக்கல்வித்துறையால் பிடிவாதத்துடன் மேற்கொள்ளப்பட்டு வந்தன. எட்டாம் தேதி நடந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் கூட தேர்வு நடத்தினால்  மாணவர்களின் உயிர்ப் பாதுகாப்புக்கு இந்த அரசால் உத்திரவாதம் தர முடியுமா? என்றும், இது டாஸ்மாக் கடைகள் திறப்பது போல்  அல்ல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்றும் இரு அமர்வு நீதி அரசர்கள் கேள்விக் கணைகளை தொடுத்தார்கள். ஆனால் வாதாடிய அரசின் தலைமை வழக்கறிஞர் அவர்கள் திட்டமிட்டபடி ஜூன் 15முதல் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் காலம் கடத்தினால் மருத்துவப் பல்கலைக்கழகக் கூற்றுப்படி கொரோனா தொற்று இன்னும் தீவிரமாகும் காலத்தில் தேர்வினை நடத்த முடியாது என்று பெரிதும் நீதிமன்றத்தில் வாதாடினார்.

காலையில் நீதியரசர்களுடைய காட்டமான கேள்விக் கணைகள் மாலை வேளையில் படிப்படியாக குறைந்து காணப்பட்டது என்பதை எல்லோரும் அறிந்தோம். உரிய விளக்கத்தினை அரசு பதினோராம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் விடுபட்ட வழக்குகளையும் இணைத்துக் கொண்டு அன்று விசாரணை நடைபெறும் என அறிவித்தார்கள்.தேர்வு தொடங்குவதற்கு மூன்றே நாட்கள் தான் இடைவெளியில் உள்ளன. இடைப்பட்ட மூன்று நாட்களுக்குள் தீர்ப்பு என்னவாக இருந்திருக்க முடியும். நீண்டகால நீதிமன்ற மரபுப்படி அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. தேர்வினை பாதுகாப்புடன் நடத்துங்கள் என்று கூட தீர்ப்பு வழங்கி இருப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் இல்லை. ஒருவேளை தேர்வை கூட ரத்து செய்து அல்லது தடை செய்திருந்தால் தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று  மாற்று தீர்ப்பினை பெறுவதற்கு அரசு தயாராக இருந்திருக்கலாம். நாம் பெற்ற முன் அனுபவங்கள் நமக்கு பாடம் புகட்டி வருகின்றன.

முறைசெய்து காப்பாற்றிய  தமிழக முதலமைச்சர்

நீதிமன்ற வழக்குகள், பெற்றோர்களின் குமுறல், மாணவச் செல்வங்களின் தொற்று அச்சம்,எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்த்தாக்குதல், கல்வியாளர்களின் கேள்விக்கணைகள், ஆசிரியர் சங்கங்களின் கொந்தளிப்புகள், பொது நோக்கர்களின் கவலைகள் என அனைத்தையும் உள்வாங்கி அமைச்சரவையை கூட்டி நல்லதொரு முடிவை எடுத்து 09.06.2020 இன்று மாண்புமிகு தமிழக  முதலமைச்சர் அவர்கள் வரும் 15ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து,பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி,விடுபட்ட 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து,மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் 80% கணக்கிடப்படும்,வருகைப் பதிவு அடிப்படையில் மாணவர்கள் 20 சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்படும் எனவும் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பினை ஊடகங்களில் கண்டு கேட்ட மக்கள் அத்தனை பேரும் கருத்து வேறுபாடுகளை மறந்து கைதட்டி வரவேற்றார்கள். பெருமகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள் என்பது யதார்த்தமான உண்மையாகும்.

பத்தாம் வகுப்பில் 9.75 லட்சம் மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வு எழுதாமல் விடுபட்டவர்கள் சுமார் 35 ஆயிரம் பேர் என மொத்தம் பதினெட்டு லட்சம் மாணவர்களை கொரோனா வைரஸ் தொடும் தாக்குதலில் இருந்து பாதுகாத்து நல்லெண்ண நடவடிக்கையாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

முறைப்படி பிடிவாதமாக தேர்வை நடத்தியிருந்தால் டெல்லி மாநாடு, கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட பாதிப்பை விட பல மடங்கு இளந்தலைமுறைக்கு பாதிப்பு ஏற்பட்டு நாடு கொந்தளிப்பான உச்சகட்ட அபாயத்தில் தள்ளப்பட்டிருக்கும். இது 100 விழுக்காடு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது. பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சுக்குள் வைரஸ் நஞ்சு உள்ளே புகுந்துவிடக் கூடாது என முதலமைச்சர் அவர்களால் காலம் கருதி சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட பாதுகாப்பான நடவடிக்கையாகும்.

பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பினால் தனியார் நிறுவனங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுப்பதில்லை. மிகச்சரியான ஒரு முடிவு எடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் நல்ல முடிவினை எடுப்பதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அமைச்சரவையினருக்கும் பெற்றோர்களோடு இணைந்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும், ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பிலும் பெரிதும் வரவேற்று நன்றி பாராட்டுதல்களை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பு காலத்தால் அழியாத
அறிவிப்பாக நிலைத்து நிற்கும். இனிமேலாவது பள்ளிக்கல்வித்துறை வழியே ஏகட்டும்! வழியே மீளட்டும்!!.

அர்த்தமுள்ள நமது பதிவுகள் தொடரட்டும்

வரவேற்று நன்றி பாராட்டுதல்களுடன்,

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.

அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.

க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.

தமிழக ஆசிரியர் கூட்டணி.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post