Title of the document

வரும் கல்வி ஆண்டில் 30 % பாடத்திட்டம் குறைப்பு! பள்ளிகள் திறப்பு தாமதமாவதால் நடவடிக்கை! 


தமிழ்நாட்டில் புதிய கல்வியாண்டில் 1 முதல் 10 - ம் வகுப்பு வரை 30. சதவீத பாடங்கள் குறைக்கப்படும் என தெரிகிறது. இந்த புதிய கல்வியாண்டில் பாடங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் 1 முதல் 10 - ம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடங்களிலும் 30 சதவீதம் குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆசிரி யர்கள் , பாடநூல் எழுத்தாளர்கள் மற்றும் மாவட்டகல்வி பயிற்சி நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய ஒருகுழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் எந்தெந்த பாடங்களை குறைக்கலாம் என்பது பற்றி பரிந்துரை செய்வார்கள். ஒவ்வொருபாடத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதியோ அல்லது முக்கியத்துவம் இல்லாத பகுதியோ நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆசிரி யர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பாடத்தையும் ஆய்வு செய்து குறைப்பதற்கென்று 100 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்களது பரிந்து ரைகளை ஜூன் 3 - வதுவாரத்தில் கல்வித்துறையிடம் சமர்ப்பிக்க உள்ளார்கள். ஏற்கனவே புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஆகவே முழுபாடத்திட்டங் களும் அவற்றில் இருக்கும் . தேவையற்ற பகுதி எவை என்பது பின்னர் அறிவிக்கப்படும். ஆகவே அந்த பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளை ஆசிரியர்கள் நடத்துவார்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post