அரசு தொடக்கப்பள்ளியில் ரூ 15 இலட்சம் செலவில் புதிய வகுப்பறை !!

Join Our KalviNews Telegram Group - Click Here
பரம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில்  ரூ 15 இலட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா: அன்னவாசல் ஒன்றியத் தலைவர் வி.இராமசாமி தொடங்கி வைத்தார்.விராலிமலை,ஜீன்.17: பரம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் ரூ 15 இலட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜையினை அன்னவாசல் ஒன்றியத் தலைவர் வி.இராமசாமி மற்றும் மதர்தெரஸா கல்லூரியின் தாளாளர் இரா.சி.உதயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

விழாவில் அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமாவதி,சிங்காரவேலு, பரம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.இந்திரா,துணைத்தலைவர் தேவேந்திரன்,அன்னவாசல்  வட்டாரக் கல்வி அலுவலர்கள் செங்குட்டுவன்,
பெ.துரையரசன் ,வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பரம்பூர் வார்டு உறுப்பினர் மாரிக்கண்ணு,
பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஆர்.சுப்பையா,பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் சௌந்தர்ராஜன்,முன்னாள் பரம்பூர் ஊராட்சி மன்றத்  தலைவர் கண்ணன்,கல்லம்பட்டி மிராசு சின்னு ,ஊராட்சி செயலர் சங்கர் மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,இளைஞர்கள்,சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர் கு.முருகையா செய்திருந்தார்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்