Title of the document

ரிசர்வ் வங்கி கண்காணிப்பில் 1,540 கூட்டுறவு வங்கிகள் மத்திய அரசு ஒப்புதல்


கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணிப்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கிகள் சிலவற்றில் நிதி மோசடி நடந்து நாட்டையே உலுக்கியது. டெபாசிட்தாரர்கள் தங்கள் சொந்த பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடினர். மேலும் கூட் டுறவு வங்கிகள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எனவே கூட்டுறவு வங்கிகளின் பொறுப்புணர்வு மற்றும் வெளிப் படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் தெரிவித்தன. இந்நிலையில் கூட்டுறவு வங்கி களை ரிசர்வ் வங்கி கண் காணிப்புக்குள் கொண்டுவர திட்ட மிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.5 லட் சம் கோடி சொத்துகளை நிர் வகித்து வரும் 1,540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது கண்காணிப்புக்குள் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: இந்த ஆண்டு பிப்ரவரி மாதத் தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்புக்குள் கொண்டுவர உள்ளதாகக் குறிப்பிட் டிருந்தார். வங்கி ஒழுங்கு முறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது அரசு இதுதொடர்பான ஆணையைப் பிறப்பித்துள்ளது.

 அதன்படி பட்டியலிடப்பட்ட வங்கிகளைப் போலவே கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகம் மற்றும் மேலாண்மை, ரிசர்வ் வங்கி மூலம் கண்காணிக்கப்படும். இதன்மூலம் டெபாசிட்தாரர்களின் பணத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும் என்ப தோடு நிர்வாகத்தில் முறைகேடு கள் நடக்காமல் தடுக்கவும் முடி யும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இனி கூட்டுறவு வங்கிகளின் தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளுக்கான நியமனங் களுக்கு, ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post