Title of the document



10ஆம் வகுப்பு : அறிவியல் பாடத்துக்கு எத்தனை மதிப்பெண்கள் கணக்கீடு - தேர்வுத்துறை அறிவிப்பு.

IMG_ORG_1592336628538



10ஆம் வகுப்பு : அறிவியலுக்கு 75, பிற பாடங்களுக்கு 100 மதிப்பெண் கணக்கீடு.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு இலவச புத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலையில் புத்தகங்கள் கொண்டு சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய முன்னெச்சரிக்கையுடன் புத்தகம் அனுப்பும் பணி மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.



பத்தாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

விடைத்தாள்களை ஒப்படைக்க பள்ளி தலைமை ஆசிரியருக்கு அரசு தேர்வு இயக்ககம் உத்தரவிடப்பட்டுள்ளது. விடைத்தாள்களுடன் அசல் மதிப்பெண் பதிவேடு, PROGRESS REPORT CARDயும் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 22 முதல் 27க்குள் விடைத்தாள்கள் உள்ளிட்டவற்றை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஒப்படைக்கப்பட்ட வினாத்தாள் உள்ளிட்ட ஒருசில நகல்களை பள்ளி வைத்திருக்க வேண்டும் என்று அரசு தேர்வுக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாணவருக்கான முகப்புத்தாளை (TOPSHEET ) இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியலுக்கு மட்டும் 75 மதிப்பெண்ணுகளுக்கு கணக்கிட வேண்டும. மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட வேண்டும். பிளஸ் 1 அரியர் மாணவர்களுக்கு கடந்தாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடலாம் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்கம் அறிவித்துள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post