Title of the document
துணையுடன் தேர்வெழுதும் நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதுவதை தவிர்க்கலாம்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து, இவ்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா காரணமாக, தள்ளி வைக்கப்பட்ட, 10 மற்றும்பிளஸ் 2 தேர்வுகள், வரும், ஜூலை, 1 - 15ல் நடைபெற உள்ளன. இதில், துணையுடன் தேர்வு எழுதும் நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள், தேர்வு எழுதுவதை தவிர்க்கலாம்.கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளியுடன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், மற்றொருவரின் உதவியுடன் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது என்பதால், அவர்கள் தேர்வை தவிர்க்கலாம்.இது தொடர்பாக, அவர்கள் தங்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம். மாற்று மதிப்பீட்டு திட்டம் மூலம், மாற்றுத் திறனாளி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுதும், பிளஸ் 2 தேர்வு நடைபெறும் நிலையில், டில்லி வட கிழக்கு பகுதியில் மட்டும், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தால் ரத்து செய்யப்பட்ட, 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post