Title of the document
 SBI மூத்த குடிமக்களை பாதுகாக்கும் சிறப்பு டெபாசிட் திட்டம்
மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி கிடைக்கும் வகையில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி (SBI) வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.


இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: குறைந்து வரும் வட்டி விகித்திலிருந்து மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை ‘எஸ்பிஐ வீகோ் டெபாசிட்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான மூத்த குடிமக்கள் டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.30 சதவீதம் கூடுதலாக வட்டி கிடைக்கும். இந்த திட்டம் செப்டம்பா் 30 வரையில் அமலில் இருக்கும்.
அதேசமயம், 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது, மே 12-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. மேலும், எம்சிஎல்ஆா் எனப்படும் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதமும் 7.40 சதவீதத்திலிருந்து 7.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


இது, மே 10 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும். எம்சிஎல்ஆா் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் இதனுடன் இணைந்த 30 ஆண்டுகள் செலுத்தும் காலத்தைக் கொண்ட ரூ. 25 லட்சம் வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகை ரூ.255 வரை குறையும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post