Title of the document

SBI Pre Approved Personal Loans on YONO எஸ்பிஐ வழங்கும் அவசர கடன் வசதி - Check Now! (PAPL)




கரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த நாடும் ஒரு மோசமான காலகட்டத்தில் உள்ளது. இன்னும் பெரும்பாலான கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளன. இந்த கோவிட் -19 காரணமாக நடுத்தர மக்கள் தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 


இது நாட்டின் பொருளாதார நிலைமையை கடுமையாக பாதித்துள்ளது. சிலர் வாழ்வாதாரத்தைக் கூட இழந்துவிட்டனர். இருப்பினும் ஏதாவது காரணத்துக்காக உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் கவலைப் படவேண்டாம் பாரத ஸ்டேட் வங்கி உங்களுக்கு உதவுவதற்காக அவசர கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நீங்கள் எந்த எஸ்பிஐ வங்கி கிளைக்கும் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் வீட்டிலிருந்தபடியே 45 நிமிடங்களுக்குள் கடனை பெற்றுக் கொள்ளலாம். 
மாதத்துக்கு மாத தவனை கட்ட வேண்டியதில்லை 
No need to pay the monthly payment for 6 months
 கரோனா வைரஸ் தொற்று காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காக எஸ்பிஐ இந்த கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதால் முதல் 6 மாதங்களுக்கு மாத தவனை கட்ட வேண்டாம் என்ற ஒரு வாய்ப்பை வழங்க வங்கி முடிவு செய்துள்ளது. அதாவது மே மாதத்தில் இந்த அவசர கடனை நீங்கள் எடுக்கிறீர்கள் என்றால் அக்டோபர் வரை நீங்கள் மாத தவனை கட்ட தேவையில்லை. உங்கள் மாத தவனை 6 மாதத்துக்கு பிறகு தான் தொடங்கும்.


  வட்டி விகிதம் 
Interest rate
எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இந்த தனிநபர் அவசர கடனை எடுக்கலாம். இந்த அவசரக் கடன் ஆண்டுக்கு 7.25 சதவிகிதம் என்ற வட்டி விகதத்தில் கிடைக்கிறது. 
  நீங்கள் எவ்வளவு கடன் வாங்க முடியும் 
How much can you borrow
 தனிநபர் கடன் : ரூபாய் 2 லட்சம் வரை. ஓய்வூதிய கடன் : ரூபாய் 2.5 லடசம் வரை சேவை வகுப்பு (Service Class) : ரூபாய் 5 லட்சம் வரை. தனிநபர் அவசர கடன் பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் PAPL எண்ணை தட்டச்சு செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் வங்கி கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்களை தட்டச்சு செய்து அதை 567676 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும் 


நீங்கள் கடன் பெற தகுதியானவரா இல்லையா என்பதை வங்கி தெரிவுக்கும். தகுதியான நபர்கள் 4 செயல்முறையில் கடன் பெறுவார். எஸ்பிஐ ஆப்பான YONO SBI ல் Avail Now விருப்ப தேர்வை செடுக்கவும். அடுத்து நீங்கள் கடன் காலம் மற்றும் தொகையை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளீடு செய்ததும் பணம் உங்கள் வங்கி கணக்கில் தானாக வரவு வைக்கப்படும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post