Title of the document
ஒன்பது வருடங்களாக வழங்கப் படாத எட்டு மாத ஊதியம் !
தமிழ்நாடு முதலமைச்சரால் மட்டுமே தீர்வு காண இயலும் : 
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் !!
கடந்த ஒன்பது வருடங்களாக வழங்கப்படாத எட்டு மாத ஊதியம்,  நடப்பு ஆண்டான 2020 ஆம் ஆண்டிலாவது கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும்.அவரால் மட்டுமே  சாத்தியம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு முதலமைச் சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்  செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது : " படித்து பட்டம் பெற்று ஆசிரியர் பணி கிடைக்காமல் வறுமையில் வாழும் உடற்கல்வி,
ஓவியம், கணினி அறிவியல்,இசை, தையல், தோட்டகலை,கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி ஆகிய பட்டதாரிகள் நிலையறிந்து அவர்களை பகுதி நேர ஆசிரியர் களாக தமிழ் நாடுஅரசுபள்ளிகளில் பணி புரிய  உத்தரவிட்டதுடன் 16549 ஆசிரியர்களையும் பணிநியமனம் செய்தவர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான். கடந்த 2011 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியன்று  சட்டப்பேரவை விதி 110-படி, ஆண்டு முழுவதும் ஊதியம் பெறும் வகையில்  99 கோடியே 29 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் பணி அமர்த்தப் பட்டனர். ஆனாலும் 5000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற நிலையில் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்கப்படவில்லை. தொடர்ந்து ஏப்ரல் மாதமும் பணி செய்திருந்த போதிலும் அம்மாதத்திற்கான  ஊதியமும் வழங்கப்படவில்லை. பின்னர் வந்த மே மாதம் பள்ளி முழுஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை யும்  சென்று விட்டது.  ஆனால் மாத ஊதியம் குறித்து தகவல் எதுவுமே தெரியவில்லை. அடுத்த கல்வி யாண்டும் பின்னர் துவங்கிவிட்டது.
ஜூன் மாதம் பள்ளிதொடங்கியதும் வேலைக்கு சேர்ந்த 4வது மாதத்தில் தான்முதன் முதலில் வழங்கப்பட்ட ஊதியத்தில்  மே மாதம் தவிர மார்ச், ஏப்ரல்ஆகிய இரண்டு மாதங்களுக்கு மட்டுமே ஊதியம்  வழங்கப்பட்டது. இதுவே  சிக்கலுக்கு முதல் காரணம்.இப்படி முதல் முறை விடுபட்ட  2012 ஆம் ஆண்டிற்கான மே மாத ஊதியம்  இதுவரை கடந்த 8 வருடமாக வழங்கப்படவில்லை என்பது தான் வேதனை. இதனால் ஒவ்வொரு வருக்கும் 50 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் 2014ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி 7 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. பின்னர் 2017ம் ஆண்டு  700 ரூபாய் உயர்த்தப்பட்டு,  தற்போது மாதம் 7700  ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 9 ஆண்டு களாக பணி புரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நடப்பு மே மாதம் ஊதியம் உட் பட 8 வருடங் களாக வழங்கப்படாத மே மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
இதற்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடவும் வேண்டும்."இவ்வாறு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கி      ணைப்பாளர் சி செந்தில்குமார் தெரிவித்தார் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post