கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து!
சுவாசத்தொகுதி தொடர்பான நோய்கள் பல அசெளகரியங்களை ஏற்படுத்துகின்றன.
முக்கியமாக நுரையீரலில் தங்கி நிற்கும் சளி மற்றும் இருமல் போன்றவை எமது
அன்றாட வாழ்வில் பல இன்னல்களை ஏற்படுத்தும். இவற்றுக்கு சரியான நிவாரணம்
கிடைக்காவிடின், அதுவே வைத்திய உதவியை நாடவேண்டிய சுகாதாரப் பிரச்சினையாக
மாறிவிடும்.
நெஞ்சு சளி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, இருமல், கரையாத நுரையீரல் சளி
மற்றும் நுரையீரல் தொடர்பான பல நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் ஓர் எளிய
நாட்டு மருந்து பற்றி இங்கே பார்க்கலாம்.
இதை நீங்கள் செலவே இல்லாமல் வீட்டில் செய்து பார்க்க முடியும்.தேவையான
பொருட்கள்:ஒரு வெற்றிலை.தோல் நீக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி.சிறிதளவு
தேன்.
செய்முறை:வெற்றிலையை அதன் காம்பை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக
வெட்டிக்கொள்ள வேண்டும்.
வெற்றிலைத் துண்டுகள் மற்றும் இஞ்சியுடன் 1 ஸ்பூன் கொதிநீரை சேர்த்து
மிக்ஸியில் நன்றாக அரைத்து, அரைத்து வரும் சாற்றை வடித்து எடுத்துக்கொள்ள
வேண்டும். இதன் காரத் தன்மையை குறைக்க சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
இப்போது நாட்டு மருந்து தயாராகிவிட்டது.
நெஞ்சு சளி, இருமல் போன்ற பிரச்சினைகளால் அவதியுறுபவர்கள் இதனை செய்து
தொடர்ந்து 1 வாரத்திற்கு காலை, மாலை என 10 மில்லிலிட்டர் அளவில் அருந்திவர
இந்த பிரச்சினைகள் இல்லாமல் போகும். நெஞ்சிலுள்ள கரையாத சளியும்
கரைந்துவிடும்.
இதை அருந்துவதால் செரிமான பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய்களால்
கஷ்டப்படுபவர்கள் இந்த 10 மில்லிலிட்டர் சாற்றை காலையில் வெறும் வயிற்றில்
தொடர்ந்து 48 நாட்கள் குடித்துவர நுரையீரல் பிரச்சினைகள் குணமாகி,
நுரையீரல் ஆரோக்கியமானதாகவும் பலமுள்ளதாகவும் மாறிவிடும்.
Post a Comment