Title of the document
தனியாருக்கு இன்சூரன்ஸ் துறையை திறந்து விட்டபின் இந்தியாவில் இந்தத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. ஆயுள் காப்பீடு மற்றும் பொதுக் காப்பீடு என 2 பிரிவுகளுமே அபாரமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. இதனால் பொது மக்களிடம் இன்சூரன்ஸ் பற்றிய விழிப் புணர்வு அதிகமாக உருவாக்கப்படுகிறது. இதை செயல்படுத்துபவர்கள் இத் துறையில் செயல்படும் ஏஜன்டுகள், புரோக்கர்கள், கார்ப்பரேட் ஏஜன்டுகள் போன்றோரே. உங்களது தகுதிக்கு நீங்களும் ஏஜன்டாக மாறலாம். ஐ.ஆர்.டி.ஏ., எனப்படும் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குபடுத்தும் ஆணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால் ஏஜன்டாக முடியும். இதற்கு ஏதாவது ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நல்ல எதிர்கால வாய்ப்புகளைக் கொண்டிருப்பதால் கடுமையான உழைப்பையும் விடாமுயற்சியையும் முதலீடாகக் கொண்டு நீங்கள் முன்னேற முடியும். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post