நிகழ்ச்சியில் கண் கலங்கிய அமைச்சர் செங்கோட்டையன் !

Join Our KalviNews Telegram Group - Click Here

20200528073422

பள்ளிக்கல்வித்துறை சார்பில் வகுப்பறை செயல்பாடுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் நோக்கில், 'வகுப்பறை நோக்கின்' என்ற மொபைல் செயலி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை டி.பி.ஐ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன்கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.அதில், இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முன்னோடியாக விளங்குவதற்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தஅமைச்சர், படிப்படியாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு 34,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

'பள்ளிக்கல்வித்துறையில் பலர் இந்த மாதம் ஓய்வு பெறப் போகிறீர்கள் என நினைக்கும்போது...' என்று பேச ஆரம்பித்தவர் சட்டென உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதார்.

இதனையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் அமைச்சருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் பள்ளிக்கல்விதுறை செயல்பாடுகள் குறித்து விளக்கமாகப் பேசினார்
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்