சென்னை : 'டாஸ்மாக்' கடைகள், நாளை திறக்கப்படும் நிலையில், மற்ற மாநிலங்களை
பின்பற்றி, தமிழகத்திலும், மது வகைகளின் விலை உயர்த்தப்படலாம் என்ற,
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 'கொரோனா' வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை;
நோய் தடுப்பு நடவடிக்கை; ஊரடங்கால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட
காரணங்களால், தமிழக அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மதிப்பு
கூட்டு வரிஇதனால், அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட
சலுகைகள் நிறுத்தப்பட்டன. பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியும்
உயர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில், மார்ச், 25ம் தேதி
மூடப்பட்ட மதுக் கடைகள், சென்னை தவிர்த்த மற்ற இடங்களில், நாளை
திறக்கப்படுகின்றன.
அவை, காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே
செயல்படும் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது. நிவாரண பணிஅதேநேரத்தில்,
டில்லி உட்பட, சில மாநிலங்களில், மது பானங்களின் விலை உயர்த்தப்பட்டதை போல,
தமிழகத்திலும், சிறிதளவு விலை உயர்த்தப்பட்டு, அதில் கிடைக்கும் பணத்தை,
தமிழக அரசு, நோய் தடுப்புமற்றும் நிவாரண பணிகளுக்கு செலவிடலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது. தள்ளிப்போட முடிவு? இதற்கிடையில், மது கடைகள்
திறப்பதற்கான அறிவிப்பை, திரும்ப பெறுவது தொடர்பாக, அரசு ஆலோசித்து
வருகிறது. எனவே, மதுக் கடைகள் திறப்பு தள்ளிப் போகலாம் என, தெரிகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment