Title of the document
அரசு கலைக் கல்லூரிகளில் ஷிப்ட் முறை விரைவில் முடிவுக்கு வரும் உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல் தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு கடன் உதவி வழங்கும் விழா நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கடனுதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகள் ஒரே ஷிப்ட் முறையில் தான் தொடக்கத்தில் இயங்கி வந்தன. ஏழை, எளிய மாணவர்கள் அதிகம் பேர் பயன்பெறும் வகையில் புதிய பாடப் பிரிவுகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அதற்கான ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டன. அப்போது போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் தான் கல்லூரிகளில் ஷிப்ட் முறை அறிமுகம் செய்யப்பட் டது. இதுகுறித்து தற்போதைய முதல்வரின் கவனத்துக்கு தெரிவித்த உடன் கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.150 கோடி நிதியை ஒதுக்கி தந்துள்ளார். முன்பே, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா காலத்தில் ரூ.200 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது ஒதுக் கப்பட்டுள்ள நிதியில், மேலும் தேவைப்படும் 715 புதிய வகுப் பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த வகுப்பறைகள் பயன் பாட்டுக்கு வந்த உடன் தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் ஷிப்ட் முறை முடிவுக்கு வரும். மாண வர்கள் காலை 9.30 மணியளவில் கல்லூரிக்கு வந்து மாலை 4.30 மணி யளவில் வீட்டுக்கு செல்லலாம். அவசர கதியில் கல்லூரிக்கு வருவது, மாலையில் தாமதமாக வீடு திரும்புவது போன்ற சிரமங் கள் இதன்மூலம் முடிவுக்கு வரும். இவ்வாறு கூறினார். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post