Title of the document
 கொரோணாவின் தாக்கம் குறைந்ததும் அவ்வளவு எளிதாக ஜனவரி வாழ்க்கைக்கு திரும்ப இயலாது. குறைந்தது ஒரு வருடத்திற்காவது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் உள்ளது. அதற்குள் மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
school%2Bstaff

சரி, பள்ளிகளை ஜூன் முதலே திறக்க மாநில அரசுகள் ஆயுத்தமாகியுள்ளன. குறைந்தது ஆகஸ்ட் மாதம் வரையில் பொறுமை காப்பதில் எந்த பிழையும் இருக்கப்போவதில்லை. கல்லூரிகளே ஆகஸ்ட்டில் துவங்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. பள்ளிகள் திறந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

1. வகுப்பறைகளை மாற்றி அமைக்க வேண்டும். மாணவர்களை ஒரு டேபிளுக்கு ஒருவர் என்ற ரீதியில் அமர வைக்க வேண்டும். ஒரு மேஜைக்கும் அடுத்த மேஜைக்கும் போதிய இடைவெளியும் அமைய வேண்டும்.

2. நடுநிலைப்பள்ளி எனில் எல்லா வகுப்புகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதில் சிக்கல் இருக்கலாம். 1,3,5,7 வகுப்புகளை காலை வேளையும் மதியம் மற்ற வகுப்புகளுக்கும் நடத்தலாம். நிறைய குழந்தைகள் ஒரே நேரத்தில் பள்ளியில் இருப்பதை குறைக்கும், வகுப்பறைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது திங்கள், புதன், வெள்ளி சில வகுப்புகள் மட்டும் பள்ளிக்கு வர வைப்பதும் மற்றவர்களை செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வர வைக்கலாம்.

3. கழிவறைகளில் கூடுதல் கவனம் தேவை. பெரும்பாலான பள்ளிகளில் இந்த சிக்கல் வரும். ஒரே ஒரு கழிவறை கொண்ட பள்ளிகளில் சீராக சுத்தம் செய்ய ஏற்பாடு இருக்க வேண்டும்.


4. பள்ளிப்பேருந்து எனில் ஒரு வரிசையில் ஒரு குழந்தை மட்டுமே இருக்கவேண்டும். இதனை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் (அருகமைப் பள்ளியின் அவசியத்தை இப்போதாவது உணர வேண்டும்)

5. வகுப்புகளுக்கு இடையே நடக்கும் இடைவேளைகளை ஒரே நேரத்தில் விடக்கூடாது. குழந்தைகள் ஒன்று கூடுவதை இது தவிர்க்கும்.

school%2Bstaff


6. ஏற்கனவே NCERT இனி ஒரு வருடத்திற்கு காலை வழிபாடு, விளையாட்டுகள், கூட்டாக செயல்படும் விழாக்களை தவிர்க்க வேண்டும் என வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. பள்ளிகள் திறக்கும் முன்னர் நீண்ட பட்டியலையும் தயாரித்து வருகின்றது.

7. சீரான நேரத்தில் கை கழுவுதலை ஆறு மாதத்திற்கேனும் செய்ய வேண்டும். அதனைப்பற்றி பள்ளி குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளியிலும் சானிடைசர், தண்ணீர் ஆகிய பொருட்களை ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும்.


8. கரோணா பற்றிய விழிப்புணர்வு படங்களையும் செய்திகளையும் மாநில அளவில் தயாரித்து பள்ளி சுவர்களிலும் வகுப்பறைகளிலும் ஒட்ட வேண்டும், வரைய வேண்டும்.

9. SMCக்களில் பொறுப்பினை கூட்ட வேண்டும். பெற்றோர்கள் பள்ளியின் சுகாதாரப்பணிகளை மேற்பார்வை செய்வதோடு அதற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

10. இணைய வகுப்புகளை எப்படி துணைப்பாடங்களாக பயன்படுத்த இயலும் என்பதனை ஆராய வேண்டும். எல்லோருக்கும் துணைக்கருவிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதனை வரும் காலங்களில் தவிர்க்க இயலாமல் போகலாம். 7% சதவிகித வீடுகளில் தான் இணைய வகுப்புகளுக்கு ஏற்பாடு இருக்கின்றது என்ற சூழலையும் மாற்ற வேண்டும். அரசு இதற்கான மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.

மேற்சொன்ன விஷயங்கள் அனைத்திலும் ஆசிரியர் மற்றும் பள்ளியின் பளு அதிகரிக்கும். அதிக நேரம் இருக்க நேரிடும். பொருளாதார செலவுகளும் அதிகரிக்கும். ஆனாலும் இதனை செய்தே ஆகவேண்டும்.

கல்வி எப்படி எல்லோருக்கும் சமமாக கிடைக்கவேண்டுமோ அதே போல இந்த காலத்திலிருந்தாவது எல்லோருக்கும் சமமான உயர்தர சுகாதாரமும் கிடைக்க வேண்டும்,

- விழியன்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post