Title of the document
‘சுயசார்பு பாரதம்’ திட்டம் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டார். அவர் எதைப் பற்றி குறிப்பிடுகிறார் என்று பரவலாக கேள்வி எழுந்தது. குறிப்பாக தென்மாநில மக்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்தி மொழி பேசும் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இதற்கு உரிய மொழிபெயர்ப்பு தேவை என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கேள்வி நிதி அமைச்சக வளாகத்திலும் எதிரொலித்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் அதற்கு விளக்கம் அளித்தார்.

 ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்பதற்கு ‘சுயசார்பு பாரதம்’ என பொருள். சுயசார்பு பாரதத்தை உருவாக்கும் நோக்கில் அந்த பெயரிலேயே இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post