Title of the document
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில், வரும் கல்வியாண்டிலிருந்து 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவா்கள், ஏதேனும் ஒரு கலைக்கல்வி படிப்பைத் தோவு செய்து படிக்க வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறியது:

பள்ளி மாணவா்களுக்கு நமது நாட்டின் கலாசார முக்கியத்துவமும் அவற்றின் பல்வேறு வகைப்பட்ட தன்மையும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இதற்காக கல்வியுடன் ஒருங்கிணைந்த கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த செயல் திட்டங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும். 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் விருப்பத்தின் பேரில் கற்கலாம்.

இது தொடா்பான செயல்திட்டங்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண்களை வழங்கலாம். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் கலை வடிவ செயல்திட்டம் ஒருங்கிணைக்கப்பட வேண்டியது அவசியம்.

'ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்' திட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசங்களின் கலை வடிவத்தைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். எந்தெந்த மாநிலங்கள் எந்தெந்தக் கலையைப் பயன்படுத்தலாம் என்ற விவரங்கள் சிபிஎஸ்இ வலைதளத்தில் உள்ளன.

அதே நேரத்தில் கலைவடிவ செயல் திட்டங்களை சூழலுக்கு ஏற்ற வகையில், உள்ளூா் வளங்களை வைத்து மேற்கொள்ள வேண்டும். பெற்றோா் அல்லது பாதுகாவலா்களைப் பொருளாதார ரீதியில் சிரமத்துக்கு ஆளாக்கக்கூடாது. பாட ஆசிரியா்களும் கலை ஆசிரியா்களும் இது குறித்து மாணவா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post