Title of the document
சென்னை: சென்னையில் அறிகுறி இல்லாமல், கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள், தனியார் கல்லுாரிகளில், தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு, நோய்க்கான அறிகுறி இல்லை. மூச்சுத் திணறல் போன்ற தீவிர அறிகுறி இல்லாதவர்கள், கல்லுாரிகளில் அமைக்கப்பட்டுள்ள, தற்காலிக வார்டுகளில் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அறிகுறி இல்லாத மற்றும், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என, 250 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட, அரும்பாக்கம் தனியார் கல்லுாரியில், 173 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமந்துாரார் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட, நுங்கம்பாக்கம் தனியார் கல்லுாரியில், 96 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட, கிண்டி தனியார் கல்லுாரியில், 20 பேர் தங்க வைக்கபப்ட்டு உள்ளனர்; இன்று, 50 பேர் மாற்றப்பட உள்ளனர். 

இதுகுறித்து, வர்த்தக மைய சிறப்பு அதிகாரி, டாக்டர் நாராயணசாமி கூறியதாவது: அறிகுறி இல்லாத மற்றும், 45 வயதுக்கு உட்பட்டவர்கள், வர்த்தக மையத்திற்கு மாற்றப்படுகின்றனர். இவர்களுக்கு, அவ்வவ்போது மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுக்கு உளவியில் ரீதியான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அவர்களின் உடல்நலம் குறித்து, டாக்டர்கள், தினமும் கேட்டறிந்து வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post