வெளிநாடுகளில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2
தேர்வை நடத்தாமல், தேர்ச்சி நிர்ணயிக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ.,
அறிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால், பள்ளி, கல்லுாரிகளின்
தேர்வுகள்பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெளிநாடுகளில் செயல்படும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக, வெளியிடப் பட்டுள்ள புதிய சுற்றறிக்கை: சர்வதேச அளவில், 25 நாடுகளில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும், பல்வேறு கால அவகாசம் நிர்ணயித்து, ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த சூழலில், ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியாக, ஒவ்வொருகால கட்டத்தில், பொதுத் தேர்வுகளை நடத்த முடியாது. அந்த நாடுகளுக்கு வினாத்தாள் அனுப்புவது, விடைத்தாள்களை எடுத்து வந்து திருத்தம் செய்து, தேர்வு முடிவை அறிவிப்பது இயலாத காரியம். எனவே, வெளிநாடுகளில் உள்ள மாணவர்களுக்கு, இதுவரை முடிந்த தேர்வுகளை தவிர, இந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு எந்த தேர்வும் நடத்தபோவதில்லை.
மாறாக, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தேர்வுகள், கற்றல், கற்பித்தல் அளவீடுகள் அடிப்படையில், தேர்வு முடிவை அறிவிக்க உள்ளோம். இதற்கான வழிமுறைகள் தயாரானதும் அறிவிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment