Title of the document
பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளை, நோய் தொற்று பாதிக்காமல், கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்'என, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஊரடங்கு காரணமாக, பள்ளிகளின் வகுப்பறைகள், நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படவில்லை. எனவே, விடைத்தாள் திருத்தத்துக்கு பயன்படுத்தப்பட உள்ள, மேஜை, நாற்காலிகள் மற்றும் வகுப்பறைகளை, நன்றாக தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்து, பின் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில், 'ப்ளீச்சிங்' துாள் மற்றும் லைசால் பயன்படுத்தி, சுத்தம் செய்ய வேண்டும்.பள்ளிகளுக்கு வரும் வாகனங்களுக்கு, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும், இரண்டு அறைகளுக்கு, ஒரு கிருமி நாசினி பாட்டில் வழங்க வேண்டும். விடை திருத்த வரும் ஆசிரியர்களின் பாதுகாப்பை பேணும் வகையில், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல், சுகாதார முறைகளை பின்பற்ற வேண்டும். உள்ளாட்சி மற்றும் சுகாதார துறையினர் வழியாக, அறைகளை சுத்தம் செய்ய வேண்டும்.ஆசிரியர்கள், பள்ளிக்கு நுழையும் போதும், வெளியே செல்லும் போதும், சோப்பால் கைகளை கழுவி, பின் கிருமி நாசினியால் சுத்தம்செய்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post