புதுடெல்லி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு தொடர்பாக அவர் விவாதிப்பார் என்று தெரிகிறது. கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 48 நாட்கள் ஆகியுள்ளது.
ஏற் கெனவே, 2 முறை ஊரடங்கு நீட்டிக் கப்படுவதற்கு முன்பு, மாநில முதல் வர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மூன்றாவது முறை யாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17 -ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். கரோனா வைரஸ் தடுப்பு பணிகள், நோய்ப் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நட வடிக்கைகள், ஊரடங்கு தொடர் பாக முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
மத்திய அமைச்சரவை செய லாளர் ராஜீவ் கவுபா, மாநிலங் கள் மற்றும் யூனியன் பிரதேசங் களின் தலைமைச் செயலாளர் கள், சுகாதாரத் துறை செயலாளர் களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, கரோனா வைரஸ் பாதிப்பு பகுதிகளை அதன் தன்மையைப் பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்ட விதிகளின் கீழ் வகைப்படுத்துவதற்கு பெரும் பாலான மாநிலங்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. புலம்பெயர்ந்தவர் கள் தங்கள் சொந்த மாவட்டங் களுக்கு திரும்புவதால் அவர் களுக்கு நோய்த் தொற்று இருக் கும்பட்சத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் சிவப்பு மண்டலத் தின்கீழ் வருவதாகவும் அதனால், இயல்பு நிலைக்கு திரும்புவது கடினமாக உள்ளதாகவும் மாநிலங் கள் கருத்து தெரிவித்துள்ளன.
தற்போதைய வண்ண விதிகளுக்கு பதில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மட்டும் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கலாம் என்றும் மாநிலங்கள் யோசனை தெரிவித்துள்ளன. இதுதொடர் பாக இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை ஊரடங்கு தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு
Post a Comment