Title of the document
ஒரு கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர், அதே கல்லூரியிலோ அல்லது மற்ற கல்வி நிறுவனத்திலோ, தொலைநிலைக்கல்வி, ஆன்லைன் முறையில் மற்றுமொரு பட்டப்படிப்பை இனி படிக்கலாம் என யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.

மாணவர்கள் தங்கள் படிக்கும் படிப்புகளுக்கு ஏற்ற வேலை தற்போது பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது பெரும்பாலான மாணவர்களின் குற்றச்சாட்டுகளாக உள்ளது. படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததால், அவர்கள் கிடைக்கும் வேலையிலும் அவர்களால் திறம்பட செயலாற்ற முடிவதில்லை. இதன்காரணமாக, அவர்கள் பல வேலைகளில் மாறிக்கொண்டே உள்ளனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில், மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் திட்டத்துக்கு பல்கலைக்கழக மானிய குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, ஒரு கல்லூரி, பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர், அதே கல்லூரியிலோ அல்லது வேறு எந்தவொரு கல்வி நிறுவனத்திலோ, ஆன்லைன் வழியிலோ அல்லது அஞ்சல் தொலைநிலைக்கல்வி முறையிலோ அவருக்கு பிடித்த  (பொருளாதாரம், அறிவியல்) என  வேறொரு துறையில் மற்றொரு பட்டப்படிப்பை படிக்க இயலும்.

ஒரே நேரத்தில் இரட்டை படிப்பு திட்டத்திற்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ள  நிலையில், யுஜிசி துணைத்தலைவர் பூஷன் பட்வர்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள குழு, இத்திட்டம் குறித்து ஆராய்ந்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும்.

கல்லூரி பட்டப்படிப்பில் தேவையான  வருகைப்பதிவேடு இருக்கும் மாணவர்களே, இரண்டாவது பட்டப்படிப்பை ஆன்லைனிலோ அல்லது தொலைநிலைக்கல்வி முறையிலோ தொடர முடியும். இந்த இரட்டை பட்டப்படிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறைப்படி, படிக்கும் திட்டம் கடந்த  2016}ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து தற்போது இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளில் இரண்டு பட்டப்படிப்பிற்கான சான்றிதழ்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இக்காலத்தில் மாணவர்கள் பட்டப் படிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்புகளை படிக்க இந்தத் திட்டம் சிறந்த வாய்ப்பாக அமையும் என  பேராசிரியர்கள்
தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post