Title of the document
திருப்பூர்: பத்தாம் வகுப்பு தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் நேற்று துவங்கியது. அறிவிக்கப்பட்ட தேதியில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், தேர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்து பள்ளிகளும் வேகமாக நடந்து வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 349 பள்ளிகள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம், 30 ஆயிரத்து, 602 பேர் தேர்வெழுத உள்ளனர். இவர்களின் பாதுகாப்புக்காக தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று துவங்கியது. ஒரு வகுப்பறைக்கு, 10 மாணவர்கள் எழுதும் வகையில், இருக்கைகள் அமைக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதால், அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதற்காக 21ம் தேதி அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post