Title of the document
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டாலும் கல்வித்துறையின் பரிசீலனையில் வேறு விதமான மூன்று திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான , பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது .

 கல்வித்துறையின் பரிசீலனையில் வேறு மூன்று விதமான திட்டங்கள் இருப்பதாக தகவல் தகவல் வெளியாகி உள்ளது .

பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தி விடைத்தாள்களை தாராள மனதுடன் திருத்தி தேர்வு முடிவுகளை வெளியிட கூடியது முதல் திட்டம் எனச் சொல்லப்படுகிறது .

நான்காவது முறையாக ஜூலை ஒன்றாம் தேதிக்கு தேர்வை தள்ளி வைப்பது இரண்டாவது திட்டம் எனக் கூறப்படுகிறது .

மூன்றாவது திட்டம் , பொதுத்தேர்வை நடத்தாமல் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி பெறச் பெறச் செய்வது தெரிகிறது .

இந்த மூன்று திட்டங்களில் ஒன்றை செயல்படுத்துவதற்கு கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக , தகவல்கள் தெரிவிக்கின்றன .

இதில் முதல் திட்டத்தை , கல்வித்துறை செயல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக , கடந்த 17 ஆம் தேதி தந்தி தொலைகாட்சி செய்திவெளியிட்டது குறிப்பிடத்தக்கது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post