Title of the document
பொது இடங்களில் கிருமி நீக்கம் செய்யும் புற ஊதா கோபுரம் : டி.ஆர்.டி.ஓ.,-வின் அசத்தல் கண்டுபிடிப்பு!!

 'அல்ட்ரா வைலட்' எனப்படும் புற ஊதா கதிர்கள் மூலம் கிருமி நீக்கம் செய்யும் கோபுரத்தை டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் உயிர்களை பலி வாங்கி வருகிறது. இந்த வைரஸின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்தியாவில் 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வைரஸ்களை அழிக்க அதிக மக்கள் கூட்டம் வந்து செல்லும் பொது இடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மின் சாதனங்களைக் கொண்ட சோதனைக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில், மாநில, மத்திய அரசுகள் சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கிருமி நாசினிகள் மூலம் கிருமி நீக்கம் செய்வது சவாலான காரியமாக இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில், இது போன்ற இடங்களில், 'அல்ட்ரா வைலட்' எனப்படும் புறா ஊதா கதிர்கள் மூலம் கிருமி நீக்கம் செய்யும் கோபுரத்தை, டி.ஆர்.டி.ஓ., உருவாக்கி உள்ளது.

விமான நிலையம், வணிக வளாகம், மெட்ரோ ரயில் நிலையம், ஓட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது என அதிகாரிகள் கூறுகின்றனர்.'யு.வி., பிளாஸ்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கோபுரம், 12க்கு 12 அடி அளவுள்ள இடத்தை 10 நிமிடங்களில் கிருமி நீக்கம் செய்யும். 400 சதுர அடி இடத்தை, 30 நிமிடங்களில் சுத்தமாக்கும் திறன் கொண்டது. இதை 'வைபை' தொழில்நுட்ப உதவியுடன், 'லேப்டாப்' அல்லது 'மொபைல் போன்' மூலம், தொடாமலேயே இயக்கவும் முடியும் என, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post