Title of the document
கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்த குழப்பமும் வேண்டாம். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றுதான் கூறி உள்ளோம். கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்தில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் தான் படிக்க முடியும். எனவே ஆன்லைன் மூலம் பாடம் எடுப்பதில் எந்த ஐயப்பாடும் வேண்டாம். 

தமிழக முதல்-அமைச்சர் அனைத்து துறையினருடன் இணைந்து முடிவு செய்த பின்னர் தான் 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தமாக அட்டவணைகள் வெளியிடப்பட்டு உள்ளது. 
தமிழக அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. மாணவர்கள் யாரும் பயப்பட தேவையில்லை. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரப்படும். எங்கள் உயிரை விட மாணவர்கள் உயிரே மேலானது. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு அனைத்து வித ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. 
குறிப்பாக விடுதிகள் திறப்பதற்கும், மாணவர்கள் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசின் வரலாற்றில் முதன் முறையாக மாணவர்கள் எந்த பள்ளியில் படித்தார்களோ அந்த பள்ளிகளிலே தேர்வு எழுதலாம். 12,864 மையங்களில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் பள்ளி திறப்பு சம்பந்தமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post