Title of the document
இராணுவ பொறியியல் சேவையில் 9300 பணியிடங்கள் நீக்கம்



முப்படை களுக்கான கட்டுமான வசதிகளை ஏற்படுத்தித் தரும் ராணுவ பொறியியல் சேவைகள் 9304 பணியிடங்களை நீக்குவதற்கான பரிந்துரைக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது


    அறிவியல் அறிவோம் : நாம் கண்ணை இமைப்பது ஏன்?


இது தொடர்பாக அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ராணுவம் விமானப்படை கடற்படை ஆகியவற்றின் செயல்திறனை அதிகரிப்பது செலவுகளை குறைப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் சேதக்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.



இராணுவ பொறியியல் சேவைகளில் உள்ள பணியிடங்களை நீக்குவதற்கு அந்த குழு பரிந்துரைத்தது அந்த பணிகளை ஏற்கனவே உள்ள பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளவும் வெளி நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அக்குழு பரிந்துரைத்தது அந்த பரிந்துரையின் அடிப்படையில் இராணுவ பொறியியல் சேவையில் காலியாக உள்ள 13 ஆயிரத்து 157 பணியிடங்களில் 9304 இடங்களை நீக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

குறைந்த பணி ஆட்களுடன் திறம்பட செயல்படுவதற்கும் செலவுகளை குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ராணுவம் விமானப்படை கடற்படை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் பணியை ராணுவ பொறியியல் சேவை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அவற்றைப் பராமரிப்பதும் அவர்களின் பணியே ஆகும். கட்டிட வடிவமைப்பாளர் பல் துறை பொறியாளர்கள் திட்ட நிபுணர்கள் மேற்பார்வையாளர்கள் இராணுவ பொறியியல் சேவையில் பணியாற்றி வருகின்றனர் அத்துறைக்கு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுமார் 13,000 கோடி ஒதுக்கப்பட்டு வருகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post