Title of the document

இந்து தமிழ் திசை’, கல்வியா ளர்கள் சங்கமம், முதலுலகின் மூத்தகுடி, கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச் சிக் கல்லூரி இணைந்து ‘அறம் 2020’ எனும் வாழ்வியல் பயிற்சி வகுப்புகள் ஜூம் (zoom) செயலி வழியே நாளை (ஜூன் 1) தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளன. 

முதல் நாள் (ஜூன் 1) பயிற்சி யில் அழகப்பா பல்கலை. மேனாள் துணைவேந்தர் முனைவர் சொ. சுப்பையா ‘மனிதம் போற்றுவோம்’ எனும் தலைப்பிலும், 

இரண்டாம் நாளில் (ஜூன் 2) ஊடகவியலாளர் மருது அழகுராஜ் ‘ஊடக அறம்’ எனும் தலைப்பிலும், 

மூன்றாம் நாளில் (ஜூன் 3) பட்டிமன்ற நடுவரும் திரைக்கலைஞருமான பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ எனும் தலைப்பிலும், 

நான்காம் நாளில் (ஜூன் 4) மங்கள்யான் திட்ட இயக்குநரும் அறிவியல் அறிஞருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை ‘மனித வாழ்வில் அறிவியல்’ எனும் தலைப்பிலும், 

ஐந்தாம் நாளில் (ஜூன் 5) எழுத்தா ளரும் ஆசிரியருமான சிகரம் சதீஷ்குமார் ‘உங்களால் மட்டுமே முடியும்’ என்ற தலைப்பிலும் உரை யாற்றுகிறார்கள். 

மின் சான்றிதழ் வழங்கப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 11 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறும். இதில் அனைவரும் பங்கேற்கலாம். இணைப்புக்கான zoom ID 625 162 1064 (பாஸ்வேர்டு 9uWcbh). பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும்.

‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம், முதலுலகின் மூத்தகுடி, கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி இணைந்து நடத்துகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post