Title of the document
உயர் நீதிமன்றம் , ' நோட்டீஸ் '
அனுப்பி யதை தொடர்ந்து , தொழிலாளர்களின் வேலை நேரத்தை , 12 மணி நேரமாக உயர்த்தி வெளியி டப்பட்ட அரசாணையை , உத்தரபிரதேச அரசு திரும்பப் பெற்றது .

உத்தர பிரதேசத்தில் , முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான , பா.ஜ. , ஆட்சி நடக்கிறது . கொரோனா வைரசால் , மாநிலத்தின் பொருளாதா ரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது . இதற்கிடையே , வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க , மாநில அரசு , தொழிலாளர்கள் சட்டங் களில் , 38 திருத்தங்களை செய்துள்ளது .

கடந்த , 1936 ம் ஆண்டின் அடிப்படை ஊதிய சட்டம் , 1932 ம் ஆண்டின் தொழிலாளர்கள் இழப் பீட்டுச் சட்டம் , 1976 ம் ஆண்டின் பிணைக்கப் பட்ட தொழிலாளர் அமைப்பு ஒழிப்பு சட்டம் , 1996 ம் ஆண்டின் கட்டடம் மற்றும் பிற கட்டு மானத் தொழிலாளர்கள் சட்டம் ஆகிய , நான்கு சட்டங்கள் மட்டும் , முன்பு இருந்தவாறு நடைமு றையில் இருக்கும் என , தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் , தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை , எட்டு மணி நேரத்தில் இருந்து , 12 மணி நேரமாக உயர்த்தி , அரசாணை வெளியிடப்பட்டது . இதற்கு , ஆர்.எஸ்.எஸ் . , அமைப்பின் , பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் .

இந்நிலையில் , இந்த அறிவிப்பை எதிர்த்து , அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் , ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது . இதை விசாரித்த நீதிமன்றம் , மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது . நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து , வேலை நேரத்தை , 12 மணி நேரமாக உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை , மாநில அரசு திரும்பப் பெற்றது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post