கரோனா தொற்று உள்ள இடங்களில் தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும். அங்கு
பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் முழுக்கவச உடையுடன் செல்ல ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து ஈரோடு மாவட் டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது:
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வெளி மாவட்டம், வெளி
மாநிலங்களில் இருந்தால், அவர்கள் சொந்த ஊர் வர இ-பாஸ் வழங்கப்படுகிறது.
மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர் ஒருவரும் வரலாம்.
விடுதி மாணவர்களுக்கு
தனியார் பள்ளிகளில் விடுதி களில் தங்கி படித்த மாணவர்கள், 3 நாட்களுக்கு
முன்பே விடு திக்கு வர வேண்டும். அவர் களுக்கு தேவையான ஏற்பாடு களை பள்ளி
நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.
மலைப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தேர்வு பட்டியல் மற்றும் தகவல்கள்
கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தேர்வு எழுதும் மாணவர்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்
துள்ளது. கரோனா தொற்று உள்ள இடங்களில் தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும்.
அங்கு பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் முழுக்கவச உடையுடன் செல்ல ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலை காரணமாக தேர்வு எழுத முடியாதவர்களுக்கு
மறுதேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment