மதுவுக்கு எதிராக அரசுப் பள்ளி மாணவி எழுதிய கதையைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திருப்பூர் ஆட்சியர், எல்லோரும் ஏதேனும் ஒரு தீய பழக்கத்தை விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருப்பூர், வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்புப் படிக்கும் கனிகா என்னும் மாணவி தனது முத்து முத்தான கையெழுத்தில் ஒரு கதையை எழுதினார். மதுவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் எண்ண ஓட்டங்களையும் அவரால் கடைசியாக மதுவை விட முடிந்ததா என்பது குறித்தும் கனிகா ஒரு பக்கக் கதை ஒன்றை எழுதி இருந்தார்.
அதை அவரின் தந்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தக் கதையை திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தக் கதை மனதை உருக்கியதாகத் தெரிவித்த ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மக்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு தீய பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Post a Comment