Title of the document
images%2528141%2529
தலைமுடிக்கு சாயம் ( டை ) போட்டுக் கொள்வது வெளித்தோற்றத்துக்கு அழகாகத் தெரியலாம். ஆனால் அது சுகாதார ரீதயில்,  உடற்செயல் ரீதியில் உடலுக்கு ஏற்றதல்ல. மேலும் பல்வேறு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று பல ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.

தலைமுடிச் சாயத்தில் உள்ளது அனைத்துமே தீவிரமாக வினைபுரியக்கூடிய கரிம வேதிச் சேர்மங்களே ஆகும். அரோமேட்டிக் அமைன்கள்,  அரோமேட்டிக் நைட்ரஜன் வழிப் பொருட்கள்,  பீனால் சேர்மங்கள் என்ற பலவகைப் பொருள்கள் ஆகும். பொதுவான வேதிப்பொருள் பாரா பினைலின் டை-அமின் ppd என்பர். இதுதான் முடிக்குக் கருப்பு நிறத்தை அளிக்கிறது எனக் கூறலாம். பல்வேறு  நிலைப்படுத்தி வேதிப்பொருள்களோடு ( H2O2 போன்ற ) கலந்து தலை முடியில் தடவும்போது முடியில் ஊடுருவிச் சென்று முடியின் இரண்டாவது அடுக்கான கார்டெக்ஸி அடுக்கில் சென்று , சாயம் நிலைநிறுத்திக் கொள்ளும். இதனால் சில நாட்களுக்குத் தலைமுடி கருப்பாகத் தோற்றமளிக்கும். பிறகு நிறம் மந்தி கொண்டே வரும்.
images%2528142%2529

தலைச் சாயத்தில் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் எல்லோருக்கும் ஏற்றதாக இருப்பதில்லை. பெரும்பாலோர்க்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதாகத்தான் உள்ளது. டை போடும்போது தலையில் எரிச்சல் , தலைமுடி உதிர்தல் , முடியில் பிளவு ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

 தலையில் செதில் செதிலாக தோல் உரியலாம். கொப்பளங்கள்கூட ஏற்படும். டையின் வாசமே தீவிர சளி ஆஸ்துமா நோயை மேலும் தீவிரப்படுத்தக்கூடியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டை பயன்படுத்துவதால் கண்பார்வை பாதிக்கப்படும் என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை. கண்புருவத்திற்கோ கண் இமைகளுக்கோ பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானதாக முடியும். கண்பார்வையும் இழக்க நேரிடலாம்.

பி.பி.டி வேதிப்பொருளால் தொண்டைக் கட்டுதல் , ரத்தசோகை , இரைப்பை அழற்சி , தலைச்சுற்றல் ஆகியவையும் ஏற்படும். இந்த அரோமேட்டிக் அமைனிகள் , தீவிரமான புற்றுநோய் ஊக்குவிக்கிகளாகவும் , செல்களில் மரபு மாற்றங்களை தூண்டக்கூடியவைகளாகவும் உள்ளது என ஆய்வுகள் எச்சரிக்கை செய்துள்ளன. கருவுற்ற தாய்மார்கள் தலைச்சாயம் பயன்படுத்தினால் அது வளர் கருவையும் பாதிக்கும்.

இயற்கையாகக் கிடைக்கும் மருதாணியைப் பயன்படுத்தினாலும் கீல்வாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நரை உடல் நலத்தை எந்த வகை பாதிக்காது. ஆனால் நரையை மறைக்கப் பூசும் சாயத்தால் பாதிப்பு நிச்சயம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post