Title of the document
 





கூகுள் பிளே ஸ்டோரில் பேரண்டல் கண்ட்ரோல் அம்சத்தை இயக்க பல்வேறு வசதிகள் இருக்கின்றன. இதை செயல்படுத்த பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் இருக்கும் பட்சத்தில் கூகுள் பிளே ஸ்டோர் கொண்டு குழந்தைகள் அனுமதியின்றி சேவைகளை வாங்குவதை தவிர்க்க முடியும். How to setup Parental controls in Google Play Store Easy Steps
கூகுள் பிளே ஸ்டோரில் பேரண்டல் கண்ட்ரோல் அம்சத்தை இயக்க பல்வேறு வசதிகள் இருக்கின்றன. இதை செயல்படுத்த பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் இருக்கும் பட்சத்தில் கூகுள் பிளே ஸ்டோர் கொண்டு குழந்தைகள் அனுமதியின்றி சேவைகளை வாங்குவதை தவிர்க்க முடியும்.





 

கூகுள் பிளே ஸ்டோர்
கூகுள் பிளே ஸ்டோரில் இதற்கென பேரண்டல் கண்ட்ரோல் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதை கொண்டு செயலி மட்டும் கேம்களை ஃபில்ட்டர் செய்வதோடு, கூகுள் பிளே ஸ்டோரில் சேவைகளை வாங்க முற்படும் போது பாஸ்வேர்டை பதிவிட கோருகிறது.இதுபோன்ற அம்சத்தை செயல்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.


பேரண்டல் கண்ட்ரோல் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்வதற்கான வழிமுறை
இந்த வழிமுறை நேரடியாக இயங்குவதோடு, இதற்கு கூகுள் பிளே ஸ்டோர் மட்டுமே போதுமானது. இது கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் பிரீ இன்ஸ்டால் செய்யப்படுகிறது.





கூகுள் பிளே ஸ்டோரில் பேரண்டல் கண்ட்ரோல் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்வதற்கான வழிமுறைகள்
1 - ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோரை திறக்கவும்
2 - செட்டிங்ஸ் ஆப்ஷனில் பேரண்டல் கண்ட்ரோல் ஆப்ஷனை ஆன் செய்து பாஸ்வேர்டை செட் செய்ய வேண்டும்
பேரண்டல் கண்ட்ரோல் ஆப்ஸ் & கேம்ஸ் தடை 

 
பேரண்டல் கண்ட்ரோல்களை ஆக்டிவேட் செய்ய, கூகுள் பிளே ஸ்டோர் சென்று மெனு பாரை க்ளிக் செய்து செட்டிங்ஸ் பகுதியில் பேரண்டல் கண்ட்ரோல் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதனை ஆன் செய்ய பின் நம்பர் ஒன்றை உருவாக்க வேண்டும். இதனால் குழந்தைகள் இந்த அம்சத்தை பின் நம்பர் இன்றி ஆஃப் செய்ய முடியாது. இதன்பின் ஆப்ஸ் & கேம்ஸ், திரைப்படங்கள், இசை என நீங்கள் விரும்பும் தரவுகள் எல்லாவற்றிற்கும் ஒவ்வொன்றாக தடை விதிக்க முடியும்.


 


சேவ் ஆப்ஷன்
இதை செயல்படுத்த ஆப்ஸ் & கேம்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து பிளே ஸ்டோரில் எந்த வயது தொடர்பான தரவுகளை தோன்ற வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதே வழிமுறையினை அனைத்து வித தரவுகளுக்கும் மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு பகுதியை தேர்வு செய்த பின் அதனை உறுதிப்படுத்த சேவ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.





பின் நம்பர் முக்கியம்
இனி ஒவ்வொரு முறை பிளே ஸ்டோர் செல்லும் போது, குழந்தை நீங்கள் குறிப்பிட்ட விமர்சனங்கள் அடங்கிய தரவுகளை மட்டுமே பார்க்க முடியும். மேலும் ஏதேனும் செயலியை கூகுளில் இருந்து தேடி இன்ஸ்டால் செய்ய முற்பட்டால், பின் நம்பரை பதிவிட வேண்டும். 


பிளே ஸ்டோரில் அனுமதியின்றி சேவைகள் வாங்கப்படுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்
இதை செய்ய செட்டிங்ஸ், கீழ் புறமாக ஸ்கிரால் செய்து Require authentication for purchases ஆப்ஷனில் 'For all purchases through Google Play on this device' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி நீங்கள் மேற்கொண்ட மாற்றங்களை உறுதிப்படுத்த அக்கவுண்ட் பாஸ்வேர்டை பதிவிட வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post