Title of the document
 தமிழக அரசு ஊழியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. ஜுலை 2021 வரை அகவிலைப்படி உயர்வு இல்லை









தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜுலை 2021 வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி ஏற்றம்- இறக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புள்ளியியல் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் ஆசிரியர்-அரசு ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள், குடும்ப ஓய்வூதிய தாரர்கள் உள்ளிட்ட 18 லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் குடும்பங்கள் என மொத்தம் ஒன்றரைக் கோடிப் பேர் பயன் பெற்று வந்தார்கள்.








இந்நிலையில் அண்மையில் மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ரத்து செய்தது. அத்துடன் 2020 ஜனவரி மாதம், 2020 ஜுலை மாதம், 2021 ஜனவரி மாதம், 2021 ஜுலை மாதம் ஆகியவற்றுக்கான அகவிலைப்படி உயர்வை ரத்து செய்தது. இதே பாணியில் தமிழக அரசும் ஜனவரி மாதத்திற்காக உயர்த்தி அறிவித்த அகவிலைப்படி உயர்வை ரத்து செய்துள்ளது.







அத்துடன் ஜுலை 2021 வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது என்றும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் ரத்து செய்து பிற்பகலில் தமிழக அரசு அறிவித்த நிலையில் இப்போது அடுத்த அதிரடியாக GPF சந்தாதாரர்களுக்கு வட்டி 7.9%லிருந்து  குறைப்பு, அகவிலைப்படி உயர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post