Title of the document
கொரோனா நோய்க் கிருமியின் பாதிப்பால் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மே மாத இறுதியில் பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள நகரவை மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வீடியோ கால் மூலமாக தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.காயத்ரி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து என்.கல்பனா ஆங்கில பட்டதாரி ஆசிரியை கூறுகையில், மாணவர்களுக்கு வீடியோ காணொளி மூலம் பயிற்சிகளை அளித்து வருகிறோம். மாணவர்கள் தங்கள் படித்த பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ளவும் அவற்றுக்காக பயிற்சி அளிக்கவும் மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது.

இதன் மூலம் வாட்ஸ் ஆப்பில் கேள்வித்தாள் அனுப்பி அதற்கு பதிலாக மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை அனுப்புதல். மேலும் ஆன்லைன் வகுப்புகள் face to face ஆன் லைன் வகுப்புகள் வீடியோ காணொளி மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை  எடுத்து வருகின்றனர்.

மாணவர்களும் முழு ஒத்துழைப்போடு செயல்பட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைய வாய்ப்பு இருக்காது என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவை மட்டுமல்லாமல் ஆன்லைனில் ஆசிரியர்களுக்கும் டெக்னாலஜி தொடர்பாகவும் மொழி சார்பாகவும் ஆங்கில மொழி பற்றியும் பயிற்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

டெக்னோ டீச்சர்ஸ் டீம் (Techno Teachers'team ) என்ற குழுவினை அமைத்து ஒருங்கிணைத்து இந்த பயிற்சியினை தொடர்ந்து அளித்துக் கொண்டு வருகிறோம். ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறையின் போது வழங்கப்படும் பயிற்சிகள் பள்ளிகள் திறந்த பின்பு அவர்களது வகுப்பறையில் கற்றல் கற்பித்தலின் முன்னேற்றத்திற்காக பயன்படும் என்ற வகையில் பயிற்சிகளை நாங்கள் ஆன்லைனில் மூலமாக அளித்து கொண்டு வருகிறோம். ஆசிரியர்களும் அதற்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

பெற்றோர்களும் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதில் பெருமையாகக் கருதுகிறோம் என்று தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post