சிவில் சர்வீசஸ் தேர்வு தள்ளிவைக்கப்படுமா? யு.பி.எஸ்.சி. விளக்கம்

Join Our KalviNews Telegram Group - Click Here
ஊரடங்கு உத்தரவால் சிவில் சர்வீசஸ் தேர்வு தள்ளிவைக்கப்படுமா? யு.பி.எஸ்.சி. விளக்கம் 
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா நோய்த்தொற்று இருக்கும் நிலைமை குறித்தும், தேர்வு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டம் நேற்று நடந்தது. 
அதில் சிலவற்றை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 2019 சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான ஆளுமைத் தேர்வுகள் பற்றி, மே மாதம் 3-ந்தேதி ஊரடங்கு முடிந்த பிறகு முடிவு எடுக்கப்படும். 2020 சிவில் சர்வீஸ் தேர்வு (முதல்நிலை), என்ஜினீயரிங் சேவைகள் (முதன்மை), புவியியலாளர் சேவைகள் (முதன்மை) தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இனிவரும் சூழலை பொறுத்து, தேவைப்பட்டால் இந்தத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படும்பட்சத்தில், அதுபற்றிய அறிவிப்பு தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். 


 கொரோனா தடுப்பு பணிக்காக மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஏப்ரல் முதல் ஓராண்டுக்கு தங்களின் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதத்தையும், தேர்வாணையத்தின் இதர அலுவலர்கள் ஒரு நாள் ஊதியத்தையும் விட்டுக்கொடுத்து இருக்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
THANKS TO DAILY THANTHI

இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்