Title of the document
புதுடில்லி: ''விளையாட்டு போட்டிகளை விட மாணவர்கள் கல்வி தான் முக்கியம். பள்ளி, கல்லுாரிகளை முதலில் திறக்க வேண்டும்,'' என கபில் தேவ் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் 61. வேகப்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டரான' இவர், கடந்த 1983ல் இந்திய அணிக்கு முதல் உலக கோப்பை பெற்றுத் தந்தார். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு உலகம் முடங்கியுள்ள நிலையில் இவர் கூறியது:
இப்போதைய நிலையில் கிரிக்கெட் போட்டிகளை துவங்குவது தான் முக்கிய பிரச்னைகளாக நினைக்கிறீர்களா?, நான் வேறு மாதிரியாக சிந்திக்கிறேன். சிறுவர்களை பற்றி அதிகம் கவலைப்படுகிறேன்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். இவர்களுக்குத் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் தான் நமது இளைய தலைமுறையினர்.
ஆதலால் முதலில் பள்ளி, கல்லுாரிகளை திறப்பதற்குத் தான் முன்னுரிமை தர வேண்டும். கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் எல்லாம் பிறகு தானாக நடக்கத் துவங்கிவிடும்.
போட்டி தேவையா
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாட வேண்டுமா என கேட்கின்றனர். உணர்ச்சியின் வேகத்தில் ஆமாம் என்று சொல்லிவிடலாம். இப்போதுள்ள சூழ்நிலையில் இரு அணிகள் விளையாடுவது முக்கியமல்ல. ஒருவேளை உங்களுக்கு பணம் தேவைப்படுகிறது என்றால், முதலில் எல்லைப்பகுதியில் இந்தியாவுக்கு எதிரான செயல்களை நிறுத்துங்கள், பிறகு பார்க்கலாம்.
பொதுவாக பணம் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுவது என உன்னதமான செயல்களுக்கு செலவிடப்பட வேண்டும். ஒருவேளை எங்களுக்கு பணம் தேவையென்றால் இங்கு பல்வேறு மத அமைப்புகள் உள்ளன. அவர்களாக முன்வந்து அரசுக்கு உதவுவர். ஏனெனில் அது அவர்களின் பொறுப்பு.
இவ்வாறு கபில் தேவ் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post