கொரொனா ஊரடங்கில் கால்நடைகள் உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு உணவு மற்றும் தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டி திருச்சி புத்தூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலால் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. அனல் காற்று வீசுகின்றது. இதனால் கால்நடைகளும், பறவைகளும் மார்ச் முதல் வாரத்திலேயே வெயிலின் தாக்கத்தை அதிகமாக உணர்கின்றன. நீருக்காகவும், நிழல்பகுதிக்காகவும் ஒதுங்குகின்றன. கால்நடைகள் மற்றும் பறவைகள் நலன் கருதி உணவு மற்றும் தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டியினை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பாக திருச்சி புத்தூர் பகுதியில் அமைத்து உள்ளார்கள். ஜீவராசிகளுக்கு
24 x 7 மணி நேரமும் கிடைக்கும் வகையில் தொட்டியில் தண்ணீர்
வைத்துள்ளனர்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் ஏற்கனவே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறார்கள். தற்போது கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும் உணவளித்து தாகம் தீர்க்கும் தொட்டி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
Post a Comment