Title of the document
IMG_20200406_105528

பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கு 3 பருவங்களாக பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் ஒரே பருவமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

இது, எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அச்சாரமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், 2012 - 13ம் கல்வி ஆண்டு முதல் முப்பருவ கல்வி முறை செயல்படுத்தப்பட்டு வருதிறது.

இது, 2015 - 14ம் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதாவது, காலாண்டு வரை முதல் பருவம், அரையாண்டு வரை 2ம் பருவம் இறுதியாக 3ம் பருவம் என்றவாறு பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் தனித் தனியாக பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வரும் கல்வி ஆண்டில் ( 2019 - 20 ) ல் வரும் முப்பருவ முறை ரத்து செய்யப்படது தொடர்ந்து , ஒரே பருவமாக அதாவது ஆண்டு முழுவதும் ஒரே பாடப்புத்தகம் என்ற வகையில் , தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் என்றவாறு புத்தகம் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே , 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு , நடப்பு கல்வி ஆண்டில் செயல் படுத்தவதற்கு உத்தரவிட்டது. தொடர்ந்து , தேர்வுக்கான ஏற் ' பாடுகள் மேற்கொள்ளும் பணி களும் முடுக்கி விடப்பட்டது. மேலும் , இந்த தேர்வுக்கு , 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் 3 பருவ பாடப்புத்தகங்களையும் ஒன்றாக சேர்த்து படிக்க வேண்டிய நிலையும் உருவானது. அதற்கு தகுந்தவாறு , 5 மற்றும் 8ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி முறையை ரத்து செய்வதற்கும் திட்டமிடப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு பலதரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் , தற்காலமாக இந்த முடிவை தமிழக அரசு கைவிட்டது.

இந்நிலையில் , 2020 - 21ம் கல்வி ஆண்டில் 8ம் வகுப்புக்கு , முப்பருவ கல்வி முறைக்கு பதிலாக ஒரே பருவத்தின் கீழ் புத்தகங்கள் வழங்குவதற்கு , பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு , தமிழ் , ஆங்கிலம் ஆகிய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு , மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அறிவியல் , கணிதம் , சமூக அறிவியல் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது.

இது, 2020 - 21ம் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான முன் நடவடிக்கையாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில் , 5ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி ' முறையை பின்பற்றிதான் , புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post