Title of the document


‘யூடியூப்’ மூலம் தினமும் நடத்துகிறது ஆராய்ச்சி, தொழில்நுட்ப படிப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கம்

சென்னை ஐ.ஐ.டி. புதிய முயற்சி சென்னை ஐ.ஐ.டி. புதிய முயற்சியாக திறன், தொழில்நுட்ப படிப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கை ‘யூடியூப்’ வழியாக தினமும் நடத்துகிறது.

  சிறப்பு கருத்தரங்கம் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டில் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், தொழில்நுட்ப மேம்பட்ட கற்றல் குறித்த தேசிய திட்டம் (என்.பி.டி.இ.எல்.) என்ற அமைப்பு மூலம் ஆராய்ச்சி, தொழில்நுட்ப படிப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கை சென்னை ஐ.ஐ.டி. ஒவ்வொரு நாளும் யூடியூப் சேனல் மூலம் வழங்குகிறது.

 வருகிற மே மாதம் 15-ந்தேதி வரை இந்த கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. வாரத்தின் இடைப்பட்ட நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும், வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு ஒரு பகுதியும், 6.30 மணிக்கு ஒரு பகுதியும் என 2 வேளைகளில் நடத்த இருக்கின்றனர்.

 ஆராய்ச்சி, தொழில்நுட்ப படிப்புகள் இந்த கருத்தரங்கில் திறன் சார்ந்த படிப்புகள் என்னென்ன? என்ன மாதிரியான படிப்புகளை படித்தால் வேலைவாய்ப்பு இருக்கும்? ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துச் சொல்லப்படுகிறது. முதல் 45 நிமிடம் அந்த துறை சார்ந்த வல்லுனர்கள், பேராசிரியர்கள் படிப்புகள் குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும் பேசுவார்கள். அடுத்த 15 நிமிடம் கேள்வி, பதில் நேரமாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை அந்த நேரத்தில் கேட்டு, ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும். மே 15-ந்தேதி வரை தினமும் என்ன மாதிரியான படிப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து பேசப்பட உள்ளது என்பது குறித்த முழுவிவரங்கள் என்.பி.டி.இ.எல். என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் அதற்கான ‘யூடியூப் லிங்க்’-ம் கொடுக்கப்பட்டுள்ளது.a
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post