குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள், உதவி எண்கள் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர்களை அணுகலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு, தொலைபேசி வழியாக உளவியல் ஆலோசனை,
மருத்துவ உதவி, குறுகிய கால தங்கும் வசதி, உணவு மற்றும் சட்ட உதவிகளை,
மாவட்ட நிர்வாகங்கள் வழியே, சமூக நலத்துறை வழங்கி வருகிறது.பாதிக்கப்படும்
பெண்கள், உதவி எண்களான, 181; காவல் துறை உதவி எண், 1091, 112 ஆகியவற்றில்
புகார் தெரிவிக்கலாம்.
இப்புகார்களை, மாவட்ட பாதுகாப்பு அலுவலர்கள், குடும்ப நல ஆலோசகர்கள்
விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பர். சமூக நலத்துறையின் கீழ் செயல்படும்,
சேவை இல்லங்கள், ஒருங்கிணைந்த சேவை மையம், இடைக்கால தங்கும் இல்லங்கள்,
பணிபுரியும் மகளிர் விடுதி போன்றவற்றில் பாதுகாப்பாக தங்க
வைக்கப்படுவர்.அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, இலவச சட்ட உதவி, மனநல
ஆலோசனை ஆகியவை வழங்கப்படும்.
பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்கு, தமிழக அரசு உறுதுணையாக
இருக்கும். எனவே, பெண்கள் தயங்காமல், உதவி எண்களையும், சமூக நல அலுவலர்கள்
மற்றும் அருகில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களையும், உடனடியாக தொடர்பு
கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
Post a Comment