தமிழகம், கேரளா, இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வௌவால்களுக்கு கொரோனா
பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தகவல்
தெரிவித்துள்ளது.
வௌவால்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி
கவுன்சில் ஆய்வு நடத்தியது. தமிழகம், புதுச்சேரி, கேரளா,
இமாச்சலப்பிரதேசத்தில் வௌவால்களில் இருந்து மாதிரி சேகரித்து பரிசோதனை
செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு, பரிசோதனைகள் என்று பல வகையில்
மனிதர்கள் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்
கழகம் (ICMR) வெளியிட்டுள்ள ஆராய்ச்சியின் முடிவின்படி இரண்டு வகையான
வௌவால்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை வௌவால்கள், இடைநிலையாக வேறு உயிரினத்திற்குப் பரப்பி
(Intermediate host) அதன் மூலம் மனிதர்களுக்கு தொற்றை ஏற்படுத்த வல்லன.
Rousettus, Pteropus என்ற இரண்டு வகையான வௌவால்களின் தொண்டையில் இருந்து
எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
Post a Comment