Title of the document
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் பிடித்தம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியதாரர்களுக்கு, ஓய்வூதியத்தில், 20 சதவீத தொகையை குறைக்க முடிவு
செய்துள்ளதாக, தகவல் வெளியானது. இதை, மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: மத்திய அரசு
ஊழியர்களின் ஓய்வூதியத்தில், 20 சதவீதத்தை குறைக்க அரசு
திட்டமிடப்பட்டுள்ளதாக பரவும் செய்தி தவறானது. ஊழியர்களின் ஓய்வூதியம்
குறைக்கப்படாது. சம்பளமும் பாதிக்கப்படாது. இவ்வாறு பதிவிடப்பட்டது.
நிதி அமைச்சகத்தின் டுவிட்டை பகிர்ந்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா
சீதாராமன், 'வதந்திகளை நம்ப வேண்டாம்; ஓய்வூதித்தை குறைக்கும் எண்ணம்
அரசுக்கு இல்லை. ஓய்வூதியதாரர்களின் நலனுக்கும், நல்வாழ்விற்கும் அரசு
உறுதி அளிக்கிறது' என பதிவிட்டுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment