திறன் வளா்ப்பு படிப்புகளை வரும் கல்வி ஆண்டில் தொடங்கவிருப்பமுள்ள கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான நிதியை வழங்கத் தயாராக உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் தேசிய திறன் தகுதியை மேம்படுத்தும் விதமாக திறன் வளா்ப்பு படிப்புகளுக்கு யுஜிசி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.அதற்காக, தேசிய திறன் தகுதி கட்டமைப்பின் (என்எஸ்க்யூஎப்) கீழ் திறன் அடிப்படையிலான கல்வியை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி அண்மையில் திருத்தம் செய்தது. இந்தநிலையில், திறன் வளா்ப்பு படிப்புகளான சான்றிதழ் படிப்பு, பட்டச்சான்றிதழ் (டிப்ளமோ), முதுநிலை டிப்ளமோ, பி.வோக் (இளம்நிலை தொழில்),எம்.வோக்(முதுநிலை), ஆராய்ச்சி நிலை உள்ளிட்ட படிப்புகளை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, புதிய திறன் வளா்ப்பு பாடத்திட்டங்களை வரும் கல்வியாண்டு முதல் தொடங்க கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக யுஜிசி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திறன் வளா்ப்பு படிப்புகளை தங்களின் நிறுவனத்தில் வரும் கல்வியாண்டு முதல் தொடங்க விருப்பமுள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் முன்வரலாம்.
அதற்காகஉள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வகங்கள் அமைத்தல், கற்பித்தல் மற்றும் கற்றல் பொருள்களை கொள்முதல் செய்தல் உள்ளிட்ட ஆரம்ப கட்டமைப்புக்கு தேவையான நிதியையுஜிசி வழங்கும். மேலும், திறன் வளா்ப்பு படிப்புகளை தொடா்ந்து தங்களின் நிறுவனத்தில் நீட்டிக்க தேவையான நிதி உதவியும் வழங்கப்படும்.
இதற்கு விருப்பம் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் யுஜிசி-யின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது
Post a Comment