Title of the document
குதிரையின் நீண்ட தலை அமைப்பில் , கண்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளன இதனால் அதற்கு இரண்டு ஒற்றைக்கண் பார்வைகள் ( இரண்டு கண்களும் இருவேறு பொருள்களை பார்க்கும்திறன் ; தனிமனிதனுக்கு இரண்டு கண்களும் ஒருபொருளை மட்டும்தான் பார்க்க முடியும் ) கிடைக்கும். ஒரே சமயத்தில் தனது இரண்டு பக்கவாட்டுத் திசைகளிலும் பார்க்க முடியும்.

அத்துடன் தனக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க முடியும் அதன் உடலால் மறைக்கப்படுகிற பின் பகுதியை மட்டும்தான் அதனால் பார்க்க முடியாது. தனக்குப் பின்னாலிருக்கிற பொருள்களைக் குதிரை இரண்டு கண்களாலும் பார்க்க முயற்சிக்கும் போது அது கண்களை முன்பக்கம் திருப்பிப் பார்வையைக் குவியப்படுத்தும். அப்போது அதற்கு பக்கவாட்டுப் பார்வையும் பின்புறப் பார்வையும் மறைந்துவிடும். அதன் கண்கள் சுமார் 1.2 மீட்டருக்குக் குறைவான தொலைவில் உள்ள பொருள்களைக் குவியப்படுத்த முடியாது. ஆனால் அதுதான் சாப்பிடும் இரையைக்கூட பார்ப்பதே இல்லை.

குதிரைகளின் கண்களைக் கவசம் போட்டு மறைக்கும்போது தான் ஓடுகிற திசையில் மட்டுமே கவனத்தை செலுத்தும் , பக்கவாட்டிலோ  , பின்புறத்திலோ என்ன நடக்கிறது என்பது அதற்குத் தெரியாது. மேலும் குதிரையின் கண்களைவிட உயர்ந்தமட்டத்தில் இருக்கும் பொருள்களையும் அதனால் தெளிவாகப் பார்க்க முடியாது.

தொலைவில் உள்ள பொருள்களையும் நுட்பமாகப் பார்க்க குதிரையால் இயலாது. குதிரை நிறக்குருடு வேறு. இந்தக் குறைபாடுகளைச் சமாளிக்க குதிரையின் நீண்ட கழுத்து உதவுகிறது. தலையின் நிலையை மாற்றித் திருப்பி தனது கண்களில் பொருள்கள் தெளிவாக தெரியும்படி குதிரை செய்து கொள்கிறது.

குதிரையின் கண்ணில் உள்ள விழித்திரை தட்டையாக இருக்கும். மற்ற விலங்குகளில் அது குழிவாக உள்ளது. அதனால்தான் தன் தலையை திருப்பி விழித்திரையில் பொருள்கள் பிம்பம் குவியப்படும்படி செய்ய குதிரையால் முடிகிறது. அத்துடன் பெரும்பாலான குதிரைக்குக் கண்ணில் உள்ள லென்சும் , கார்னியாவும் சரியானபடி வடிவமைக்கப்படவில்லை. கீறல் விழுந்த லென்சைப்போல மேடுபள்ளங்களுடனிருப்பதால் குதிரைக்குத் தெளிவாக பார்வை கிடைப்பதில்லை. தன்தலைக்கு முன்னாலிருப்பவற்றை தெளிவாக பார்க்கக்கூடிய குதிரைகளே உயர்தரமானவையாக மதிப்பிடப்பட்டுள்ளன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post