Title of the document
தேர்வு முறைகளே ... செத்துப்போங்க

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இந்த சுருங்கிப் போக வைக்கும் நடைமுறை ????
யேய் .... திரும்பாதே .. பேசாதே .... டிஸ்கஸ் பண்ணாதே .... பார்க்காதே .... காப்பி அடித்தால் தொலைத்து விடுவேன் 
பார்த்தால் ....HM இடம் அனுப்பி விடுவேன் .... இந்தப் பழைய புளித்துப் போன ஆசிரியர்களின் மிரட்டலும்,
அதை ஏற்று பயப்படுவது போல் மாணவர்கள்பாசாங்கு செய்வதும் ,ஆசிரியர் அந்தப் பக்கம் நகர்ந்தவுடன் தங்கள் நட்புகளுடன் சேர்ந்து சிரிப்பதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 
ஒவ்வொரு நாள் தேர்வின் போதும் கேள்வித் தாட்களை கையில் வாங்கும் குழந்தைகள் வெறுப்பின் உச்சத்தை வெளிக்காட்டுகின்றனர்  தங்கள் முகங்களில் .
50 பேர் அமர்ந்து இருக்கும் வகுப்பறைகளில் 5 குழந்தைகளின் முகங்களில் கூட புன்சிரிப்பு தவழுவதில்லை. 
ஏன் படிக்கிறோம் என்று அவர்களுக்கும் தெரிவதில்லை , எதற்காகப் படிக்க வேண்டும் என்றும் ஒரு பார்வையில்லை , எப்படித் தான் படிக்க வேண்டும் என்ற புரிதலுமில்லை, 
எதுவுமே இல்லாமல் 11 வருடங்களைக் கடந்து 12 ஆம் வருடத்திலும் வகுப்பறையை பல சமயங்களில் இடுகாடுகளின் தலைமையிடமாக உணர வைக்கும் இந்த தேர்வு முறைக்கு எப்போது மூடு விழா எடுப்போம் ?
தேர்வறைகளில் வினாத்தாள்களை மாற்றிக் கொள்வதும் , விடைகளை அறிய பேசுவதும் பிட் எடுத்து வருவதும் அவர்களைப் பிடிக்க பறக்கும் படை ஓடுவதும் என நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே பார்க்கிறேன். ஏன் இன்னும் மாற்றமே வரவில்லை ???
இன்னும், அவர்கள் என்னவோ திருடர்கள் போலவும் , நாம் என்னவோ போலீஸ் போலவும் , திருட்டு கும்பலை விரட்டிப் பிடிக்கும் மனோபாவாம் ????
தேர்விற்காக 35 ஐ 10 ஆம் வகுப்பிற்கும் , 70  ஐ 12 ஆம் வகுப்பிற்கும் நிர்ணயித்து அவர்களை செல்லாக் காசாக்குகிறது இந்தக் கல்வி முறை , அதற்கு 200% ஒத்துழைப்பு தருவது ஆசிரியர்கள் ... புலம்பலும் கவலையும் சுமந்து எல்லாவற்றுக்கும் துணை போகும் பெற்றோர்கள் ....
மருகி மருகி மடிந்து போகும் குழந்தைகளின் பட்டாம்பூச்சி இதயங்கள் .
தேர்வறைகளின் சுவர்களும் வினாத் தாட்களும் கூட குழந்தைகளின் இந்த மனோநிலை கண்டு கண்ணீர் சுரக்கின்றன. 
அதிகாரங்களை கையில் வைத்திருக்கும் உயர்நிலை சிந்தனையாளர்களுக்கு இவற்றை சிந்திப்பதில் சிக்கலிருக்கலாம் , ஆனால் வகுப்பறையில் உயிரோட்டம் வேண்டுமென வெளியில் பேசும் நமக்கு இதைக் கூற குரல் எழுப்ப எப்போது தைரியம் வரும் ???
கல்வியாளர்களும் கல்விக் கோட்பாடுகளும் இதை வருடக்  கணக்கில் பதப்படுத்தி வைக்காமல் உடனடியாக மாற்று வழிகளை கைகாட்டினால் எவ்வளவோ நன்மைகள் விளையும் 
மாணவர்கள் இயல்பாக மகிழ்ச்சியாக வாழவும் , கல்வியை வாழ்க்கையின் புரிதலுக்காக கற்பதும் , தான் விரும்பும் துறைகளை தேர்வு செய்ய நம்பிக்கை பெற வாய்ப்புகள் உருவாக்குவதும்  தான், தேர்வு முறையின் மாற்றாக இருக்க வேண்டும் , பாடப் புத்தகங்களை கண் , காதுகளை திறக்கச் செய்து சைக்கோ மோட்டார் டொமைன் வேலை செய்யும்படி  தேர்வு முறைகள் மாற வேண்டும். புத்தகங்களை அருகே வைத்து பார்த்து யோசித்து சுயமாக எழுத வைக்கும்  முறைகளைக் கொண்டு வாருங்கள். (OPEN BOOK System)
அப்போதுதான் குப்பனும் குருவம்மாவும் அறிவியல் மேதைகளாக அடையாளம் தெரிவார்கள் , முனுசாமியும் கிருஷ்ணம்மாளும் கணக்கின் ஆராய்ச்சியாளர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளும் காலம் வரும். 
பரந்துபட்ட சமய சார்பற்ற , சாதிப் பிரிவினையற்ற , அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள ஜனநாயக குடிமகனாக / குடிமகளாக நம் வகுப்பறைக் குழந்தைகளை மாற்ற ...... மாற்றுத் தேர்வு முறை அவசியம் ....
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. தேர்வு நடக்கும் முறைகளைக்
    குறிப்பிடும்போது - "தேர்விறகாக 35%ஐ 10ம் வகுப்பிற்கும், 70%ஐ 12ம் வகுப்பிற்கும் நிர்ணயம் செய்து மாணவர்களை செல்லாக்காசாக்குகிறது இந்தக் கல்வி முறை"
    என்று சொல்லியும், அதோடு கூடவே முக்கியமாக "அதற்கு 200% ஆதரவு தருபவர்கள் ஆசியர்கள்" என்று இங்கு கருத்து கூறிதையும், கூறப்பட்டிருப்பது வேதனை தரும் கருத்து. நீங்கள் அறிமுகப்படுத்தாத online test எல்லாம் ஏற்கெனவே பார்த்த, எழுதிய ஆசிரியர்கள்கூட இங்கே இருக்கிறார்கள். ஆசிரியப் பணி மேற்கொள்ளாதவராக இருப்பின் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக அரசுப் பள்ளி பள்ளிகளிலேயே ஒவ்வொரு ஆசிரியரும் (சுய குடும்பத்தை மறந்து) மாணவர்களோடு ஒன்றி மாவட்டம் மற்றும் மாநில அளவில் சிறந்து விளங்கச் செய்வதை அறியவில்லை போலும். திறமை மிக்க ஆசிரியர்கள் பற்றி அறிந்து பின் கருத்துறைத்தல் நன்மை பயக்கும்.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post