உலக அளவில், 203
நாடுகளில், தன் கோர
கரங்களை விரித்து,
மனித உயிர்களை காவு
வாங்கி வரும் கொரோனா
வைரசின் தன்மை
குறித்து, ஆய்வு செய்து
வரும் நோய்த்
தடுப்பாற்றல் துறையினர்,
அதிர்ச்சியின் உச்சத்திற்கு
சென்று, என்ன
செய்வதென தெரியாமல்
உறைந்து போயுள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு
வர, அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. மாறாக, சமூக
விலகல், வீட்டிற்குள் அடங்கி கிடப்பது போன்ற செயல்பாடுகள் மட்டுமே, வைரஸ்
தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ளும் உலகளாவிய ஒரே ஆயுதமாக உள்ளது.
மாயாஜாலம்
நோய்த்
தடுப்பாற்றல் மரபணு ஆராய்ச்சிகள் மற்றும் தொற்று வைரஸ்கள் குறித்த
ஆய்வுகளில், பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும், மதுரை காமராஜ் பல்கலை நோய்த்
தடுப்புத் துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன், நம் நிருபரிடம் கூறியதாவது:
இந்நோய்க்கு
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில், உலக அளவில் மருத்துவ
வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதுவரை மனித குலத்தை தாக்கிய வைரஸ்
வரிசையில், கொரோனா போன்ற கொடூர குணம் கொண்ட வைரசை மக்கள் எதிர்கொள்ளவில்லை.
பேரழிவை ஏற்படுத்தும் இதுபோன்ற வைரசுக்கு, மிகச் சிறந்த தொழில்நுட்பம்
உள்ள ஒரு நாட்டில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்க, குறைந்ததது, 10 மாதங்கள்
தேவைப்படும். கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய நடைமுறைகள் அவ்வாறு உள்ளன.
ஆனால்,
இந்த வைரசின் மரபணுக்கள் அளவில் சிறியது. இதனால், மனித செல்களில்
ஒட்டிக்கொண்ட பின், அவ்வப்போது தன்னுடைய மரபணுவில் மாற்றம் - மியூட்டேஷன்,
செய்து கொள்ளும் மாயாஜால வைரசாக உள்ளது. இதனால், பல கோடி ரூபாய் செலவிட்டு
தடுப்பு மருந்து கண்டுபிடித்தாலும், அதை ஒருவருக்கு செலுத்தும் நிலையில்,
குறுகிய காலத்திலேயே, அந்த மருந்தின் வீரியத் தன்மையில் இருந்து, இந்த
வைரஸ் தன் மரபணுவை மாற்றி, தப்பி வேறு வகையில், மனித செல்கள் மீதான
தாக்குதலை தொடர்கிறது.
இவ்வகை தன்மை கொண்ட இந்த
வைரசுக்கு, பல கோடி ரூபாய் செலவிட்டு, தடுப்பு மருந்து கண்டுபிடித்தால்
வீணாகிவிடும். மருத்துவ துறைக்கு இது பெரும் சவால்.பி.எஸ்.எல்., - 4
லேப்கொரோனா வைரஸ் சோதனைக்கு, பி.எஸ்.எல்., - 4 எனும், &'பயோ சேப்டி
லெவல்&' வகை லேப்கள் வேண்டும்.ஆனால், 2003க்கு பின் புனேயில் உள்ள
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, டில்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட்
ஆப் கம்யூனிகேஷனல் டிசீசஸ் போன்ற குறிப்பிட்டு சொல்லும் லேப்கள் மட்டுமே
உள்ளன. பி.எஸ்.எல்., - 4 வகை லேப்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க
வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மனிதர்
செல்களை அதிகம் விரும்பும் கொரோனாமனிதர்களை தாக்கும் வைரஸ்கள் விலங்கு,
பறவைகளிடம் இருந்து தான் வருகின்றன. காடுகள் அழிக்கப்படும்போது வேறு
வழியின்றி, விலங்குகள், மனிதர்களை நெருங்கி விடுகிறது. இந்த கொரோனா வைரஸ்,
விலங்குகளின் செல்களில் பெருகுவதை விட மனிதர்கள் செல்களில், 100 மடங்கு
பல்கி பெரும் தன்மை கொண்டவையாக உள்ளன. மேலும், இது நுரையீரலை தாக்கி மனிதனை
கொல்கிறது என்பதும், ஆய்வுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
&'சார்ஸ்&' தந்த பாடம் என்ன?
கொரோனா
போல், 2003ல் உலக நாடுகளை அதிகம் மிரட்டியது, &'சார்ஸ்&' வைரஸ்.
திடீரனெ தோன்றும் இதுபோன்ற வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த, ஆய்வுகள்
மேற்கொள்ள, இந்தியா போன்ற நாடுகளில் பி.எஸ்.எல்., - 4 வகை லேப்கள் போதிய
எண்ணிக்கையில் இல்லை. &'சார்ஸ்&' வந்து சென்ற, 17 ஆண்டுகளுக்கு
பின்னரும் இதுபோன்ற தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்த இந்தியா கவனம்
செலுத்தவில்லை. இதில், ஜீரோ நிலையில் தான் உள்ளோம்.
இந்தியா
போன்ற நாடுகளில் இதுபோன்ற எதிர்கால பாதுகாப்பு மற்றும் ஆய்வுகளுக்காக, மிக
குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்வதும் ஒரு காரணம்.இதனால் தான், கொரோனா
போன்ற வைரஸ் பேராபத்தை ஏற்படுத்தும் காலங்களில், அதை எதிர்கொள்ள
முடியவில்லை. &'இனியாவது இந்தியா போன்ற நாடுகள் விழித்துக் கொள்ள
வேண்டும்&' என்கின்றனர் நோய்த் தடுப்பாற்றல் துறை ஆராய்ச்சியாளர்கள்.
Post a Comment